Vijay: என்னது கோட் படத்தில் மூன்று விஜய்யா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் இன்னும் சில தினங்களில் பேட்ச் வேலைகளையும் நிறைவு செய்துவிட்டு ஒட்டுமொத்த சூட்டிங் முடிக்க உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை படக் குழுவினர் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். பாண்டிச்சேரியில் நடிகர் ஜெயராம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் விஜய்யின் கெட்டப் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

Actor Vijay s GOAT movie update surprised his fans

நடிகர் விஜய்: நடிகர் விஜய், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துள்ளார். ஆயினும் இன்னும் சில தினங்கள் இந்த படத்தின் பேட்ச் வேலைகளின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் இதையடுத்து இந்த மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடையும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் பாண்டிச்சேரியில் ஜெயராம் சம்பந்தமான சில ஆக்ஷன் காட்சிகளின் சூட்டிங் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீசாகவுள்ள சூழலில் அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை படக் குழுவினர் நிறைவு செய்து வருகின்றனர்.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்: சமீபத்தில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் தெரிவித்திருந்தார். இதேபோல இந்த படத்தின் விஜய் தொடர்பான டீ ஏஜிங் வேலைகளையும் விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து லாஸ் ஏஞ்சல்ஸில் சில தினங்களுக்கு முன்பு மேற்கொண்டது குறித்து தகவல்கள் வெளியாகின. படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் 90களில் சூப்பர் ஹிட் நாயகன் மோகன் வில்லனாக இணைந்துள்ளார்.

விஜய் கெட்டப் குறித்த அப்டேட்: இந்நிலையில் படத்தில் கேமியோ கேரக்டர்களில் மறைந்த நடிகர் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவும் படத்தில் ஒரு கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் மற்றும் வெங்கட் பிரபு காம்பினேஷன் காட்சிகள் கேரளாவில் நடந்த ஷூட்டிங்கில் படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளதாகவும் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியான சூழலில் தற்போது படத்தில் மூன்று கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் உற்சாகம்: இதில் ஒரு கேரக்டரை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக பாதுகாத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் முன்னதாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கள் அல்லது டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள சூழலில் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X