பார்ட்டிக்கு ரெடியா மக்களே.. வெளியானது விஜய்யின் கோட் பட விசில் போடு வீடியோ பாடல்!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது கோட் படம். இந்த படம் விஜய்யின் 68வது படமாக வெளியான நிலையில் படத்தை இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. முன்னதாக அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படம் மாஸ் காட்டிருந்த நிலையில் அதே போன்றதொரு படத்தை விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனல் விஜய் ரசிகர்ளின் இந்த எதிர்பார்ப்பை கோட் படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். மற்ற மொழி ரசிகர்களை தவிர கோட் படம் தமிழில் ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வசூலையே பெற்று வருகிறது. சர்வதேச அளவில் இந்தப்படம் கடந்த 11 நாட்களில் 380க்கு மேற்பட்ட கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

vijay goat movie whistle podu song

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீஸானது கோட் படம். இந்த படத்தில் ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்களை இணைந்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் முன்னணி ஹீரோக்களான பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்களும் லைலா, சினேகா மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் படத்தில் அரவிந்த், வைபவ், பிரேம்ஜி என வெங்கட் பிரபுவின் கேங்கும் இணைந்திருந்த நிலையில் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தொடர்ந்து தமிழகத்தில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

கலவையான விமர்சனங்கள்: மற்ற மொழி ரசிகர்களை இந்த படம் கவர தவறிய நிலையில் தமிழ் ரசிகர்களை தொடர்ந்து கொண்டாட செய்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் விசில் போடு பாடலின் வீடியோவை இன்றைய தினம் ஏஜிஎஸ் நிறுவனம் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியான இந்த பாடல் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. ஆயினும் திரையரங்கில் படத்தின் காட்சியோட்டத்துடன் சேர்த்து பார்க்கும்போது இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மிகப்பெரிய ஆபரேஷனை செய்து முடித்த பின்பு விஜய் மற்றும் அவரது நண்பர்கள் பார்ட்டி பண்ணுவதாக இந்தப் பாடல் அமைந்திருந்தது.

விசில் போடு பாடல் வீடியோ: முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியாகி இருந்த இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த பாடலுடன் பார்ட்டி செய்ய தயாராகி வருகின்றனர். இந்த பாடலில் நடிகர் விஜய் campaignஐ துவங்கட்டுமா என்று கேட்பதாக அமைந்திருக்கும், இதைக் கேட்டு நடிகர் பிரபுதேவா என்ன சொன்னாய் என்று கேட்க, ஷாம்பெயின் என்றுதான் சொன்னேன் என்று அவர் கூறுவதாக இந்த பாடலின் துவக்கம் அமைந்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களுக்கு போகப் போக பிடித்தமானதாக அமைந்துள்ளது.

வசூலை அள்ளும் கோட் படம்: படத்தின் விஜய் -திரிஷா காம்பினேஷனில் வெளியான மட்ட பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது அந்த லிஸ்டில் விசில் போடு பாடலும் இணைந்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் கடந்த 11 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 170 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சர்வதேச அளவில் 381 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. விரைவில் 400 கோடி ரூபாய் வசூலை படம் எட்டும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X