கோட் படத்தில் வெள்ளிவிழா நாயகனின் மிரட்டல் லுக்.. அதிர்ந்து பார்த்த விஜய்.. வொர்க்கிங் ஸ்டில் இதோ!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக கோட் படம் சர்வதேச அளவில் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது. சிறப்பு காட்சிகளுடன் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக மரண மாஸ் வெயிட்டிங். இந்தப் படத்திற்கு விஜய்யின் முந்தைய படங்களை போல ஹைப் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அதிகப்படியான டிக்கெட்டுகள் ப்ரீ புக்கிங்கில் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்த டிக்கெட் சேல்சே இந்தப் படத்திற்கான ஹைப்பை வெளிப்படுததியுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்யுடன் முன்னணி ஹீரோக்களான பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளது படத்திற்கான உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 90களின் வெள்ளிவிழா நாயகனாக வலம்வந்த நடிகர் மோகன் இந்தப் படத்தில் வில்லனாகியுள்ளார்.

vijay goat movie venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள கோட் படம் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் விஜய்யின் சம்பளத்துடன் சேர்ந்து 400 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. விஜய்யின் சம்பளம் மட்டுமே 200 கோடி ரூபாய் என்றும் தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட கோட் படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ள நிலையில், ப்ரீ புக்கிங் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

ப்ரீ புக்கிங்கில் அசத்தல்: இந்தப் படத்திற்கு ஹைப் அதிகமாக இல்லை என பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில், படத்தை பார்க்கும் ரசிகர்களின் விருப்பத்தை இந்தப் படம் மிகச்சிறப்பாக பூர்த்தி செய்யும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்தப் படத்தின் ரிக்கெட் சேல்சே இந்தப் படத்திற்காக ஹைப்பை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளதாக வெங்கட் பிரபு உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் சேல்ஸ் இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ஒருபுறம் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினரும் படத்தின் பிரமோஷன்களை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த 4 பாடல்கள்: இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய் -யுவன் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த 4 பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. இவற்றில் சில பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், இறுதியாக வெளியான மட்ட பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் ரீமிக்ஸ் பாடல் ஒன்று உள்ளதாகவும் அதில் பிரேம்ஜி பணியாற்றியுள்ளதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

மிரட்டல் வில்லன்: மேலும் படத்தில் விஜய்க்கு வில்லனாக 90களின் வெள்ளிவிழா நாயகன் மோகன் இணைந்துள்ளார். சாஃப்டான கேரக்டர்களில் மோகனை பார்த்துள்ள ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் அவரது வில்லத்தனம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கோட் படத்தின் வொர்க்கிங் ஸ்டில் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் விஜய், மோகன், வெங்கட் பிரபு ஆகியோர் காணப்படுகின்றனர். மோகன் தாடி சகிதம் மிரட்டலான லுக்கில் உள்ள நிலையில், அவரை பக்கத்தில் இருந்து விஜய் குனிந்து பார்ப்பதாகவும் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X