விஜய் விக் வைத்திருக்கிறாரா?.. அடிக்கடி ஹேர்ஸ்டைல் மாறும் ரகசியம் என்ன?.. லியோ ஹேர்ஸ்டைலிஸ்ட் பளிச்!

சென்னை: நடிகர் விஜய்க்கு தொடர்ந்து ஹேர் கட் செய்து வரும் ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இதுவரை விக்குக்கு ஹேர் கட் செய்ததே கிடையாது என்றும் நடிகர் விஜய்க்கு இருப்பது ரியல் ஹேர் என்றும் பளிச்சென கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சமீப காலமாக ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான ஹேர் ஸ்டைல் வைத்து நடித்து வரும் நிலையில், அதெல்லாம் வித விதமான விக் என்கிற ட்ரோல்கள் அதிகம் பரவி வருகின்றன.

Actor Vijays hair is not a wig - Hair Stylist Dev Sakthivel open interview

நடிகர் விஜய்க்கு தலையில் முடியே கிடையாது என்றும் நெகட்டிவ் ட்ரோல்கள் எல்லை மீறிய ஆபாச கமெண்ட்டுகள் மற்றும் வீடியோ மீம்கள் அதிகம் பரவி வருகின்றன.

Actor Vijays hair is not a wig - Hair Stylist Dev Sakthivel open interview

விஜய் விக் வைக்கல: ஆனால், அதெல்லாம் சுத்த பொய் என்றும் நடிகர் விஜய்க்கு இருக்கும் லாங் ஹேர் முடி ரியலான ஒன்று தான் என அவருக்கு முடி திருத்தம் செய்து திரையில் அழகாக காட்டி வரும் ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல் சமீபத்திய பேட்டியில் தொகுப்பாளினி தயங்கி தயங்கி எதற்கு அவரை பேட்டிக்கு அழைத்தோமோ அந்த கேள்வியை கேட்க, அதிரடியாக பதில் அளித்து விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

ரொம்ப மெனக்கெடுறாரு: தனது ரசிகர்களுக்காக ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு லுக்கில் காட்சி தர வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் நடிகர் விஜய் என்றும் ஆறு மாத காலம் ஒரே ஹேர் ஸ்டைலில் இருக்க என்னிடம் கட்டிங்கிற்கு வரும் போதெல்லாம் எதுவுமே சொல்ல மாட்டார், நீங்க பார்த்துக்கோங்க என அவர் சொல்வதே நமக்கு பக்கென இருக்கும். பொறுப்பை ஒப்படைத்து விட்டு செம கூலாக இருப்பார். நான் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து பார்த்து செய்யும் பொறுப்பு என் மீது விழுந்த நிலையில், கவனத்துடன் செய்து கொடுப்பேன். அவருக்கு பிடித்து விட்டால் 'சூப்பர்' என பாராட்டுவார் என்றார்.

Actor Vijays hair is not a wig - Hair Stylist Dev Sakthivel open interview

லியோ லுக் ரொம்ப புடிச்சிப்போச்சு: பார்த்திபன் லுக் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், லியோ லுக்கை கட் செய்ய சொல்லும் போது, அதை வெட்டி முடித்ததும் எனக்கே சந்தோஷம் தாங்கல, நிச்சயம் ரசிகர்களுக்கு திரையில் பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து, சார் இந்த லுக்ல ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என கேட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்றார்.

Actor Vijays hair is not a wig - Hair Stylist Dev Sakthivel open interview

தளபதி 68 லுக்: பூஜையில் காட்டியது தளபதி 68 லுக்கா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. அந்த லுக்கையும் நான் தான் கட் செய்தேன். படம் வரப்போ தான் அது ரிவீல் ஆகும் என்னால இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X