Leo OTT release date: லியோ ஓடிடிக்கு எப்போ வருது தெரியுமா?.. அதனால தான் அங்க பெருசா எடுபடல!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான நிலையில், 4 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Vijays Hindustry Hit Leo OTT release date is here

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பெரிய ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு அதிக தொகைக்கு வாங்கி வருவதால், 4 வாரத்திலேயே ஓடிடியில் வெளியிட்டு விடுகின்றன.

ஆனால், இந்தியில் அந்த நடைமுறைக்கு தடை விதித்துள்ளனர். அதன் காரணமாகத்தான் ஷாருக்கானின் ஜவான் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை.

இந்தியில் எடுபடல: பாலிவுட்டிலும் லியோ திரைப்படம் சிறப்பான வசூலை இந்த முறை ஈட்டியிருக்கும். அங்கே வெளியான கண்பத் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், லியோவுக்கு நல்ல வாய்ப்பு இருந்தும் புரமோஷன் மற்றும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அங்கே படத்தை வெளியிட முடியாமல் போக காரணமே நெட்பிளிக்ஸ் போட்ட ஓடிடி ரிலீஸ் கண்டிஷன் தான் என்கின்றனர்.

4 வாரத்தில் ஓடிடியில்: லியோ திரைப்படமும் ஜெயிலர் திரைப்படத்தை போலவே ரிலீஸ் ஆன 4 வாரத்தில் ஓடிடிக்கு வந்து விடும். அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி மற்றும் சமந்தாவின் குஷி, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்கள் 4 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாகின. அதே போல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 4 வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Actor Vijays Hindustry Hit Leo OTT release date is here

லியோ ஓடிடி ரிலீஸ் தேதி: அக்டோபர் 19ம் தேதி தியேட்டரில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் லியோ திரைப்படம் 500 கோடி வசூலை ஈட்டி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், முதல் நாள் வசூல் அறிவிப்புக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் மூச்சே விடாமல் உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் 17ம் தேதி லியோ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X