மீண்டும் விஜய்யுடன் இணைந்த நடிகை.. தளபதி 69 படத்தின் சிறப்பான சம்பவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!!
சென்னை: நடிகர் விஜய்யின் இறுதி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. முன்னதாக இந்த ஜோடி பீஸ்ட் படத்தில் இணைந்திருந்த நிலையில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது. மேலும் படத்தில் மமிதா பைஜுவும் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்து சினிமா, அரசியல் என சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு அவர் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளார். தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் தன்னுடைய தளபதி 69 படமே தனது இறுதி படம் என கடந்த ஆண்டிலேயே அறிவித்து விட்டார். தற்போது இந்த படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியலை மையமாக கொண்டு ஜனநாயகன் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ரிலீஸ்: இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே படம் ரிலீசாகவுள்ளதாக ஜனநாயகன் படம் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் இவர்களின் டான்ஸ் காம்பினேஷன் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் பூஜா ஹெக்டே உடன் மமீதா பைஜூவும் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்: இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் மற்றொரு முன்னணி நடிகையும் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது ஜனநாயகன்பத்திலும் லீட் கேரக்டரில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த படங்களில் தமிழில் ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்யுடன் அவர் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்துள்ளது. தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தில் அவர் நடித்து வருகிறார். விரைவில் இந்தப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது விஜய்யுடன் இணைந்துள்ளார்.
மூன்று நாயகிகள்: கடந்த மாதம் குடியரசு தினக் கொண்டாட்டமாக இந்தப் படத்தின் டைட்டில் வெளியானது. மேலும் அடுத்தடுத்த போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டிருந்தது. படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் படத்தின் தயாரிப்பு தரப்பான கேவிஎன் நிறுவனம் அறிவித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், பாடல்கள் மற்றும் படத்தின் பிஜிஎம் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் மூன்று நாயகிகள் இணைந்துள்ள நிலையில் அவர்களின் கேரக்டர்கள் எப்படி அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











