Arjun glimpse: 24 மணிநேரத்தில் அதிரடி.. சாதனை படைத்த ஹரோல்ட் தாஸ்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

சாதனை படைத்த அர்ஜூனின் கேரக்டர் கிளிம்ப்ஸ்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த பிப்ரவரி படத்தில் துவங்கப்பட்ட லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 52 நாட்கள் நடைபெற்று முடிந்தது.
தொடர்ந்து சென்னை திரும்பிய படக்குழுவினர் அடுத்தடுத்த ஷெட்யூல்களை சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தி முடித்தனர். இதையடுத்து மீண்டும் காஷ்மீர் புறப்பட்டு சென்ற படக்குழுவினர், சில பேட்ச் வொர்க்குகளை அங்கே மேற்கொண்டனர். முன்னதாக லியோ படத்தின் காஷ்மீர் சூட்டிங் வீடியோக்களையும் வெளியிட்டு மாஸ் காட்டினர். தொடர்ந்து விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் போன்றவையும் வெளியானது.
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் மெயின் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத் பிறந்தநாளையொட்டி, அவரது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. படத்தில் அவரது கேரக்டர் பெயரும் வெளியானது. படத்தில் ஆண்டனி தாஸ் என்ற பெயரில் அவர் நடித்துள்ள நிலையில், இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிரட்டலாக இருந்தது. இதையடுத்து கடந்த 15ம் தேதி படத்தின் முக்கியமான வில்லனாக நடித்துள்ள அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி அடுத்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் என்ற கேரக்டரில் அர்ஜூன் நடித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் விக்ரம் படத்தின் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டரை நினைவு படுத்தினார். அதேபோல, அதிரடி மாஸாக மிகவும் மிரட்டலாக அர்ஜூன் கேரக்டர் அமைந்திருந்தது. படத்தில் அவர் சஞ்சய் தத்தின் தம்பியாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் படத்தில் விஜய்யின் நண்பராக இருந்து விரோதியாக மாறுவதாக கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அர்ஜூனின் கிளிம்ப்ஸ் வெளியான 24 மணிநேரத்தில் 8 லட்சம் லைக்ஸ்களை பெற்று மாஸ் காட்டியுள்ளது. தற்போது வரை 11 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. ஒரு படத்தில் வில்லன் கேரக்டரின் கிளிம்ப்ஸ்க்கு இந்த அளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டியுள்ள முதல் சாதனையாக இது அமைந்துள்ளது. கிளிம்ப்சின் இறுதியில் அர்ஜூன் பயன்படுத்தும் வார்த்தையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை போலவே அர்ஜூனின் ஹரோல்ட் கேரக்டரும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











