Leo: எங்கத்தான் நடக்கப்போகுது லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச்.. குழப்பத்தில் படக்குழு!

சென்னை: நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. இந்தப் படத்தில் அவருடன் த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதை இறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தி நடிக்க கமிட்டாகியுள்ளார் விஜய்.

Actor Vijays Leo movie audio launch makes team continuous confusion

லியோ படத்தின் இசை வெளியீட்டை திட்டமிடுவதில் படக்குழு குழப்பம்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் சூட்டிங் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் முன்னதாக விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் பிறந்தநாட்களையொட்டி அவர்களின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியாகி மாஸ் காட்டியது. படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்ட் தாஸ் என்ற இவர்களின் கேரக்டர் பெயர்கள் இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட படத்தின் நடிகர்களின் பிறந்தநாள் வருவதையொட்டி அவர்களின் கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள விஜய், தற்போது வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ளார். படத்தின் இசை வெளியீடு வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் 5ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் நேரடியாக அதில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை அல்லது மதுரையில் இசை வெளியீடு நடக்கவுள்ளதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே மலேசியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி இந்த இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 9ம் தேதி சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி அந்த மேடையில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் முன்னதாக மேடை அலங்காரம் உள்ளிட்ட பணிகளுக்காக 4 நாட்களுக்கு முன்னதாகவே அந்த மேடையை புக் செய்துள்ளதால், விஜய்யின் லியோ இசை வெளியீடு 5ம் தேதி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் ஓபன் கிரவுண்டில் இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில், அங்கு அடிக்கடி மழை பெய்து வருவதால் இதில் சரியான முடிவை எடுக்க முடியாமல் லியோ டீம் திணறி வருகிறது. இதனால்தான் இந்த இசை வெளியீட்டில் சரியான முடிவெடுத்து அதை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் விரைவில் உறுதியான முடிவெடுக்கப்படும என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X