Leo Audio launch: செப்டம்பர் 30ல் நடக்கும் லியோ பட இசை வெளியீடு.. எங்க தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிடையில் அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் லண்டனில் படத்தின் ரிலீசுக்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே நடந்த நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.
இந்நிலையில் நேற்று முதல் படத்தின் பிரமோஷன்கள் துவங்கியுள்ளதாக இயக்குநர் லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது.

லியோ படத்தின் ஆடியோ வெளியீடு குறித்து அறிவிப்பு: விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்னும் ஒரே மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 52 நாட்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களிலும் நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. அடுத்த மாதம் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷன்கள் தற்போது துவங்கியுள்ளது.
இந்தப் படத்தின் தெலுங்கு போஸ்டர் நேற்றைய தினம் ரிலீசாகி சர்வதேச அளவில் அதிகமான வியூஸ்களை பெற்று வருகிறது. இந்த போஸ்டர் வெளியாகி ஒரு மணிநேரத்திலேயே இந்திய அளவில் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. முன்னதாக புஷ்பா 2 படத்தின் அல்லு அர்ஜூன் பெற்ற வியூஸ்களை காட்டிலும் அதிக வியூஸ்களை இந்த தெலுங்கு போஸ்டர் பெற்றுள்ளது. அடுத்தடுத்து சிறப்பான போஸ்டர்களை அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 30ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு முன்னதாகவே அறிவித்தது. ஆனால் படத்தின் இசை வெளியீடு எங்கு நடக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரும் இதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் இசை வெளியீடு வரும் 30ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மலேசியா, சென்னை, மதுரை, கோவை போன்ற பல இடங்களில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளதாகவும் மிகவும் பிரம்மாண்டமாக இந்த இசை வெளியீடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அரசியலில் ஈடுபட விஜய் தீவிரம் காட்டிவரும் நிலையில் அதிகமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் விஜய் இதுகுறித்து இந்த நிகழ்ச்சியில் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்திலேயே இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசப்போகும் பேச்சிற்காக தற்போதே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட டிக்கெட்டுகள் வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் படக்குழு மேற்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











