Leo booking: ஒரு மாதத்திற்கு முன்னதாகவே புக்கிங்.. ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த லியோ பட டிக்கெட்டுகள்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் ரிலீசுக்கு முன்னதாகவே பல்வேறு சுவாரஸ்யங்களையும் வியப்புகளையும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் விற்பனையாகியுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் புக்கிங்குகளும் 6 வாரங்களுக்கு முன்பே யுகேவில் துவங்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

Actor Vijays Leo movie bookings opened before 6 weeks in UK and sold out within 24 hours

6 வாரங்களுக்கு முன்பே வெளிநாட்டில் துவங்கிய லியோ பட டிக்கெட் புக்கிங்: நடிகர் விஜய்யின் லியோ படம் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு இந்தப் படத்தின் பல சிறப்புகள் காரணங்களாக அமைந்துள்ளன. படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படமும் மிகச்சிறப்பான வசூலை குவித்துள்ள நிலையில் இந்தப் படம் தன்னுடைய 100 சதவிகித படமாக இருக்கும் என்று லோகேஷ் முன்னதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் படம் குறித்த தன்னுடைய பேட்டியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் அழுத்தமான காட்சிகளை வைத்து படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கெட்டப்புகளில் விஜய்யை பார்க்க முடிகிறது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

படத்தில் ஆண்டனி தாஸ் மற்றும் ஹெரால்ட் தாஸ் என இருவேறு கேரக்டர்களில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் ஆகியோர் சகோதரர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் சகோதரராக விஜய்யும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விஜய் மற்றும் அர்ஜூன் மோதும் சண்டைக்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படம் முன்னெப்போதும் இல்லாத வகையில் விஜய்யின் மாஸை சிறப்பாக வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்றாற்போல இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது யுகேவில் துவங்கப்பட்டு 24 மணிநேரங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்திய அளவில் 42 நாட்களுக்கு முன்னதாக புக்கிங் துவங்கப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையை இதன்மூலம் லியோ படம் பெற்றுள்ளது. யுகேவில் இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள அகிம்சா என்டர்டெயின்மெண்ட், 120 இடங்களில் படத்தின் ப்ரீ புக்கிங்கை துவங்கி ஒரு லட்சம் யூரோக்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 24 மணிநேரத்தில் லியோ படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் தற்போது விற்றுத் தீர்ந்துள்ளன. இது விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம் என்பதை மீண்டும் அதிலும் வெளிநாட்டில் நிரூபித்துள்ளது. நடிகர் விஜய்யின் படங்களுக்கு எப்போதும் அதிக எதிர்பார்ப்பும் வசூலும் இருக்கும். தற்போது லியோ படத்திற்கு மிக அதிகமாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ் காட்டுமா லியோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X