Leo movie: வசூல்மழை பொழிந்துவரும் விஜய்யின் லியோ படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. கடந்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் ஆதரவுடன் படம் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது. தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

Actor Vijays Leo movie collections crossed 555 crores in few days

விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த லியோ படம் கடந்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்சாதனை படைத்து வருகிறது.

லியோ சக்சஸ் மீட்: இந்தப் படத்தின் சக்சஸ் மீட் கடந்த 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு அது ரத்தான நிலையில், சக்சஸ் மீட்டில் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் படம்குறித்த தங்களது பகிர்வுகளை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்த சக்சஸ் மீட்டில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விஜய் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

தளபதி 68 படம்: தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இதையடுத்து தற்போது தாய்லாந்தில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கில் பங்கேற்பதற்காக தற்போது விஜய் தாய்லாந்து புறப்பட்டு சென்றுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

லியோ பட வசூல்: இதனிடையே லியோ படம் தற்போது 16 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இதுவரை 555 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கேரியரில் அதிகமான வசூலை தொட்டுள்ள படம் என்ற சாதனையையும் லியோ படம் பெற்றுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: தன்னுடைய அடுத்தடுத்தப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் விஜய். கடந்த ஆண்டிலேயே வாரிசு மற்றும் லியோ என விஜய்யின் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் விஜய்க்கு திரையில் உள்ள மாஸை வெளிப்படுத்தும் வகையில் இரு படங்களும் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளன. அடுத்தப்படம் வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X