Vijay: ஒவ்வொரு சிங்கத்தின் கர்ஜனைக்கு பின்பும்.. லியோ ஓராண்டு நிறைவு.. கொண்டாட ரெடியா.. வீடியோ ரெடி!

சென்னை: நடிகர் விஜய்யின் இறுதிப் படமான தளபதி 69 படத்தின் ஷூட்டிங் கடந்த 6ம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் ரிலீசான லியோ படம் இன்றைய தினம் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது.

லியோ படத்தின் ஓராண்டு நிறைவையொட்டி படக்குழுவினர் அடுத்தடுத்த பதிவுகளை சமூக வலைதளங்களில் செய்து வருகின்றனர். தயாரிப்பு தரப்பும் தன்னுடைய பங்கிற்கு லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ மீண்டும் லியோ படத்தை பார்த்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

vijay leo movie thalapathy 69 movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதத்தில் ரிலீசாகி மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் 455 கோடி ரூபாய் என்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. அடுத்ததாக தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்த படத்தின் சூட்டிங் கடந்த 5ம் தேதி பூஜையுடன் துவங்கியுள்ள நிலையில் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்காக படத்தின் பாடல் காட்சியை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் ஹெச் வினோத்.

லியோ ஓராண்டு நிறைவு: இந்த பாடல் காட்சியின் சூட்டிங் ஐந்து நாட்கள் திட்டமிடப்பட்ட நிலையில் நான்கு நாட்களிலேயே படத்தின் பாடல் காட்சியின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் இன்றுடன் ஒரு ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படம் தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத பெஸ்ட் படம் என்று உச்சி முகர்ந்துள்ளார்.

கொண்டாட்ட வீடியோ: இந்நிலையில் படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, இந்த ஓராண்டு கொண்டாட்டத்தை மாஸான வீடியோ மூலம் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் லியோ படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பல சுவாரசியங்களை தயாரிப்புத் தரப்பு இணைத்துள்ளது.ஏறக்குறைய 8 நிமிடங்கள் உள்ள இந்த வீடியோ படத்தை மீண்டும் பார்த்தது போன்ற அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. ஹைனாவுடன் சண்டையிடும் விஜய், திரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் விஜய், தன்னுடைய குழந்தைகளுடன் பாசம் காட்டும் விஜய், பகைவர்களிடம் மூர்க்கமாக நடந்து கொள்ளும் விஜய் என பல்வேறு சுவாரசியங்களை இந்த வீடியோ ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்: விஜய்யின் கோட், அடுத்ததாக தளபதி 69 படங்களின் ஜானர் வேறு மாதிரியாக அமைந்த நிலையில் விஜய்யின் லியோ படம் மிகப்பெரிய பார்வை அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தது. படத்தின் வசூலும் தாறுமாறாக இருந்த நிலையில் தற்போது இந்த படம் ஒரு ஆண்டை பூர்த்தி செய்துள்ளது அனைத்து தரப்பினரையும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது. குறிப்பாக ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அவர்களின் கொண்டாட்டத்திற்கு ஈடு செய்யும் வகையில் தற்போது தயாரிப்பு தரப்பும் இந்த வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X