Leo movie: சம்பள பாக்கி விவகாரம்.. நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ள லியோ நடனக் கலைஞர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சிறப்பான வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. லோகேஷ் உள்ளிட்டவர்கள் படத்தின் ப்ரமோஷன்களையொட்டி பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் அடுத்தடுத்த பாடல்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Actor Vijays Leo movie faces dancers Salary issue

லியோ படத்தின் நடனக்கலைஞர்கள் சம்பள பாக்கி விவகாரம்: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்களில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகிவரும் சூழலில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியான நா ரெடி பாடல் யூடியூபில் தொடர்ந்து அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்தப் படத்தில் ஏராளமான நடனக் கலைஞர்களை பயன்படுத்தி பாடல் சூட்டிங் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் 1300 நடனக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆனால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடலில் தொடர்ந்து இவர்கள் 7 நாட்கள் நடனமாடிய நிலையில், ஒரு நாள் கூட சம்பளம் அளிக்கப்படவில்லை என்று நடனக் கலைஞர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து 3 நாட்களுக்குள் சம்பள பாக்கி கொடுக்கப்படவில்லை என்றால், தாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர்கள் முன்னதாக கூறியுள்ளனர். இதனிடையே இந்த நடனக் கலைஞர்களில் 800 பேர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 7 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் அதற்காக 22,000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக 22,000 ரூபாய் தரவேண்டிய நிலையில், 7,000 ரூபாய் மட்டுமே தரப்பட்டதாகவும் இந்தப் பாடலுக்காக தமிழகம் முழுவதும் 1500 கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு தினேஷ் மாஸ்டர் முன்பு நடனமாடியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போது ஊதியம் கொடுக்காமல் அலைகழிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். படம் ரிலீசாவதற்கு முன்னதாக நடிகர் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கான சம்பள பாக்கியை பெற்றுத் தரவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

Actor Vijays Leo movie faces dancers Salary issue

இன்னும் மூன்று நாட்களில் தங்களுக்கான சம்பள பாக்கி வழங்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விஜய்யின் இந்தப் பாடல் காட்சி பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு லிரிக் வீடியோவாக வெளியானது. இந்நிலையில், தொடர்ந்து புகைந்துக் கொண்டிருந்த இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X