Leo movie: லியோ படத்தின் 2வது வாரயிறுதி.. திரையரங்கை அதிரவைக்கும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது வாரயிறுதியில் நடைபோட்டு வருகிறது.
விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், ஜனனி என நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

படத்தின் முதல் பாதி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் இரண்டாவது பாதி கவரத் தவறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், பிரியா ஆனந்த், ஜனனி, மடோனா செபாஸ்டியன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது லியோ படம். இந்தப் படத்தின்மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படமும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் லியோ படமும் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
கலவையான விமர்சனங்கள்: படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த 10 நாட்களில் 475 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்து வருகிறது. படம் தற்போது இரண்டாவது வாரயிறுதியில் நடைபோட்டு வருகிறது. தமிழத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. படத்தின் முதல் பாதி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இரண்டாவது பாதி கவரத் தவறியுள்ளது.

ஒப்புக்கொண்ட லோகேஷ்: இதனிடையே இந்த விஷயத்தை படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இதை கவனத்தில் கொண்டு, அடுத்தடுத்தப் படங்களில் செயல்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே வட இந்தியாவில் லியோ படத்தின் கலெக்ஷன் முதல் வாரத்தில் குறைவாக இருந்த நிலையில் தற்போது கடந்த 10 நாட்களில் 32 கோடி ரூபாயை வட இந்தியாவில் லியோ படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2வது வாரத்திலும் சிறப்பு: இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படம் தற்போது இரண்டாவது வாரயிறுதியில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்துடன் எந்த பெரிய படமும் இணையாத நிலையில், சோலோவாக படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. ரசிகர்களும் தொடர்ந்து லியோ படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி: இதுகுறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அப்டேட்களை ரசிகர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் லியோ படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். படத்தில் தளபதியின் நடிப்பு வேறு லெவலில் உள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னையிலும் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











