Leo Hindi poster: லியோ போஸ்டர் இன்று வெளியாகாது.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக முன்னதாக சைமா விருது விழாவில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

அதையொட்டி நேற்று முன்தினம் முதல் படத்தின் பிரமோஷன்கள் துவங்கியுள்ளன. தெலுங்கு, கன்னட மொழிகளில் படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

Actor Vijays Leo movie Hindi poster release postponed

விஜய் ஆண்டனி மகள் மறைவையொட்டி தள்ளிவைக்கப்பட்ட லியோ போஸ்டர் ரிலீஸ்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கிய நிலையில் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. காஷ்மீரில் மட்டுமே கடுமையான குளிர், நிலநடுக்கத்திற்கிடையில் 52 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

விஜய் படங்கள் என்றாலே அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் நெருக்கடி கொடுப்பார்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் அப்டேட்களுக்காகவும் அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் படக்குழுவினர் படத்தின் ஆரம்பம் முதலே ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வகையில் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. காஷ்மீரில் விஜய் -த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்ட பலவற்றையும் ரசிகர்கள் என்ஜாய் செய்யும் வகையில் கொடுத்தனர்.

மேலும் விஜய், சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் பிறந்தநாட்களையொட்டி போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோக்களை வெளியிட்டு அதிரடி காட்டினர். இதனிடையே, படத்தின் இசை வெளியீடு, வரும் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள், ஒரு மாதத்திற்கு முன்னதாக துவங்கவுள்ளதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சைமா விருது விழாவில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

அதையொட்டி நேற்று முன்தினம் படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியது. தொடர்ந்து நேற்றைய தினம் படத்தின் கன்னட போஸ்டர் வெளியானது. இவை இரண்டுமே வித்தியாசமான வாசகங்களுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இந்தி போஸ்டர் வெளியாகவுள்ளதாக முன்னதாக படக்குழு அப்டேட் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் போஸ்டர் வெளியாகாது என்று தயாரிப்புத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்றைய தினம் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த நிலையில், அவரது மறைவையொட்டி இன்றைய தினம் லியோ படத்தின் போஸ்டர் வெளியாகாது என்றும் நாளைய தினம் இந்த போஸ்டர் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனியின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும் லியோ படக்குழுவினரின் இந்த முடிவு அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் லியோ தயாரிப்பாளர் லலித்குமார், விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மகள் மீராவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. விஜய்யின் லியோ பட போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், இன்றைய தினம் வெளியாகவிருந்த போஸ்டர் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X