Leo: இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள லியோ படம்.. பெரிய சம்பவத்தை செய்துள்ள லோகேஷ்?
சென்னை: நடிகர் விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ளது லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளார்.
விஜய்யுடன் படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.

வரும் அக்டோபர் 19ம் தேதி லியோ படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், செப்டம்பர் 3வது வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகும் விஜய்யின் லியோ படம்?: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ளது லியோ. இந்தப் படத்தை மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் காஷ்மீரில் சில பேட்ச் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ள விஜய், இந்த சூட்டிங்கில் பங்கேற்கவில்லை. அவர் முன்னதாகவே தன்னுடைய சூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டார்.
முன்னதாக ரசிகர்களை ஏமாற்றாமல் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர். படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்தபோது, அங்கு எடுக்கப்பட்ட சூட்டிங்கின் சிரமங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப் படுத்தியிருந்தனர். தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள், பாடல் என வெளியாகி வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்தான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாளை கொண்டாடும்வகையில் படத்தில் அவரது கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் அவர் மரண மாஸாக காணப்பட்டார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் நடிகர் அர்ஜூன் பிறந்தநாளையொட்டி படத்தின் அடுத்த அப்டேட் காத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் சில பேட்ச் வேலைகளை முடிப்பதற்காக மீண்டும் படக்குழு காஷ்மீரில் முகாமிட்டுள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் ஒருபுறம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் LCUவில் இணையுமா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். லோகேஷின் முந்தைய படங்கள் விக்ரம் மற்றும் கைதி இரண்டும் எல்சியூவில் இணைந்த நிலையில், விரைவில் இந்தப் படங்களின் இரண்டாவது பாகத்தை லோகேஷ் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லியோ படத்தை தொடர்ந்து தலைவர்171 படத்தில் லோகேஷ் இணையவுள்ளார்.

இந்நிலையில் விக்ரம், கைதி படங்களை போல லியோ படமும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரண்டாவது பாகத்திற்கான ஓபன் எண்டிங்குடன் இந்தப் படம் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் லியோ படமும் கண்டிப்பாக LCUவில் இணையும் என்றும் தலைவர்171 மற்றும் கைதி2 படங்களை முடித்துவிட்டு, லியோ2 படத்தின் இயக்கத்தில் லோகேஷ் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











