Leo: தொடர்ந்து ட்ரெண்டிங்கில் விஜய்யின் லியோ படம்.. ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் படத்திற்கான ப்ரமோஷன்களும் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.
தெலுங்கு, கன்னடம், தமிழ் என அடுத்தடுத்த போஸ்டர்களால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் ஒரு மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அளவு கடந்து காணப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் -லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளதும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது.
விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரியில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியான நிலையில், ஒரே ஆண்டில் விஜய்யின் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாகவுள்ளதும் ரசிகர்களை அளவு கடந்த சந்தோஷத்திற்கு காரணமாக உள்ளது. இந்தப் படங்கள் இரண்டும் வெவ்வேறு ஜானர்களில் அமைந்துள்ளன. வாரிசு படத்தில் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீசாகவுள்ள லியோ படத்தில் கேங்ஸ்டராக அவர் நடித்துள்ளதாக தெரிகிறது.
லியோ படத்தில் ரிலீசுக்கு சரியாக ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், படத்திற்கான பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போது முடுக்கி விட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இதனிடையே படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 30ம் தேதி லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த ஆடியோ ரிலீஸ் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் குட்டிக் கதையுடன் பல விஷயங்களை பகிர்வார் விஜய். இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் அவரது பேச்சு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பும் நிகழ்ச்சியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ஆடியன்சும் மரண மாஸாக காத்திருக்கின்றனர். இதையொட்டி லியோ படத்தின் பல ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். #Leo, #LeoTamilPoster, #LeoPosterFeast, உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன. மேலும் இந்தப் படத்திற்கான பிரமோஷனல் டூரையும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











