Leo movie memes: லோகேஷுக்கு ஹெலிகாப்டர் வழங்கிய லலித்குமார்.. மீம்சை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. சர்வதேச அளவில் கடந்த 19ம் தேதி இந்தப் படம் ரிலீசானது.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.
முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வசூலை சர்வேதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் பெற்றுள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது. இந்திய அளவில் இந்த ஆண்டின் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது.

லியோ படத்தின் மீம்சை தெறிக்க விட்ட ரசிகர்கள்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக லோகேஷ் மற்றும் விஜய் இணைந்துள்ளனர். முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படமும் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள லியோ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
ஆயினும் லியோ படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வசூலை பெற்று வருகிறது. முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் பெற்றுள்ளது. இந்திய அளவில் இந்த ஆண்டில் வெளியான படங்களின் முதல் நாள் வசூலில் லியோ படம் அதிக வசூலை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தப் படம் கொடுத்துள்ள சிறப்பான வெற்றியை தொடர்ந்து தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் லலித்குமார்.
இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஜய்க்கு அவர் பிரம்மாண்டமான பரிசை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்தே தான் இதை திட்டமிட்டதாகவும் விஜய்யிடம் இதுகுறித்து பேசியபோது, தனக்கு தேவையான சம்பளத்தை கொடுத்ததே போதும் என்று அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் லியோ படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுத் தந்துள்ளதால் அவர் இந்த முறை இதை செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷிற்கு லலித்குமார் ஹெலிகாப்டரை பரிசாக வழங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மீம்சை வெளியிட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் முன்பு லோகேஷ் மற்றும் லலித்குமார் இருக்கும்படியான புகைப்படத்தையும் எடிட் செய்து பகிர்ந்துள்ளனர். இதன்மூலம் ஜெயிலர் படத்தின் வெற்றியை ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்த சன் பிக்சர்சை அவர்கள் வம்பிழுத்ததாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் 700 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த வெற்றியை ரஜினிகாந்த், அனிருத் மற்றும் நெல்சனுக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். தொடர்ந்து படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் இடையேயும் இந்த வெற்றியை பகிர்ந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











