Leo Business: 550 கோடியை அசால்ட்டா தாண்டும்.. லியோ படத்தின் பிசினஸை புட்டு புட்டு வைத்த பிரபலம்!

சென்னை: தளபதி விஜய்யின் லியோ படம் ரிலீஸுக்கு முன்பே 440 கோடி வரை பிசினஸ் செய்துள்ளதாகவும் படம் வெளியான பிறகு 550 கோடி வரை பிசினஸ் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக சினிமா பிரபலம் ஒருவர் புட்டு புட்டு வைத்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் கணக்குகள் ஒரு பக்கம் விண்ணைத் தொட்டு வரும் நிலையில், உடனடியாக அக்டோபர் மாதம் வெளியாக உள்ள விஜய்யின் லியோ படத்தின் வசூல் கணக்குகள் இப்பவே வெளியாக ஆரம்பித்துள்ளன.

Actor Vijays Leo movie pre release business reports are sky high

சுதந்திர தினம் மற்றும் நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் அவர் நடித்துள்ள ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தின் க்ளிம்ஸ் வெளியாக உள்ள நிலையில், இந்த லியோ பிசினஸ் ரிப்போர்ட்டும் விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினி vs விஜய்: இந்த ஆண்டு துவக்கத்தில் விஜய் vs அஜித் போட்டி வாரிசு மற்றும் துணிவு படங்களின் ரிலீஸை முன்னிட்டு பலமாக நடைபெற்றது. இரு படங்களும் ஒரே நாளில் வெளியானாலும், துணிவு படம் 200 கோடி வசூலையும் வாரிசு படம் அதிரடியாக 300 கோடி வசூலையும் பெற்றது.

இந்நிலையில், அடுத்ததாக விடாமுயற்சி இன்னமும் ஆரம்பிக்காத நிலையில், விரைவில் வரப் போகும் லியோ படத்திற்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கும் தான் பாக்ஸ் ஆபிஸ் போட்டி என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Actor Vijays Leo movie pre release business reports are sky high

லியோ ப்ரீ ரிலீஸ் பிசினஸ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்துக்கு பிறகு இயக்க உள்ள படம் வாரிசு படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் படம், கேஜிஎஃப் 2வுக்கு பிறகு சஞ்சய் தத் நடிக்கும் படம் என லியோ படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் லியோ படத்தின் தியேட்டரிக்கல் பிசினஸ் 90 கோடி ரூபாய் என்றும் கேரளாவில் 15 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 20 கோடி, கர்நாடகாவில் 12 கோடி, ஓவர்சீஸ்களில் 55 கோடி, நெட்பிளிக்ஸ் ஓடிடி உரிமம் 120 கோடி, சன் டிவி 70 கோடி என சுமார் 434 கோடிக்கு ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இப்பவே நடந்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனது புதிய வீடியோவில் ஏரியா வாரியாக சொல்லி உள்ளார்.

559 கோடி: மேலும், அதுமட்டுமின்றி இன்னும் சீனா உள்ளிட்ட ஓவர்சீஸ் ஏரியாக்களில் விநியோகஸ்தர்கள் மூலமாக படத்தை வெளியிட்டு பெரிய ஷேரை பார்க்க லலித் திட்டமிட்டு இருப்பதாகவும், தமிழ்நாட்டு திரையரங்க உரிமையையும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக 559 கோடி வரை லியோ பிசினஸ் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X