Leo pre release event: துபாயில் நடக்கும் லியோ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.. ரசிகர்களிடம் பேசும் விஜய்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை படக்குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

படம் குறித்த பல விஷயங்களை தற்போது படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

Actor Vijays Leo movie pre release function to be happen in Dubai

இந்த பேட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் ப்ரமோஷன் ஒன்றை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

துபாயில் நடக்கும் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி: நடிகர் விஜய்யின் லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்னும் சில தினங்களில் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை தொடர்ந்து படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கிய நிலையில், காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற பகுதியில் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாகவே படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டுதான் சூட்டிங்கை துவக்கினார் லோகேஷ் கனகராஜ். இதனால் சூட்டிங் துவங்கியதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பும் ஒருபுறம் வளர்ந்து வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் சூழலில் கடந்த சில தினங்களாகவே படத்தின் ப்ரமோஷன்களும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலையில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். ஆனாலும் படத்தின் இரண்டாவது பாடல், ட்ரெயிலர் என படக்குழு அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஓரளவிற்கு ஆசுவாசப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அடுத்ததாக படத்தின் மூன்றாவது சிங்கிள் வரும் திங்கட்கிழமை வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இது குடும்ப பாடலாக வெளியாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 12ம் தேதி துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நேரடியாக பகேற்கவில்லை என்றபோதிலும், அவரின் 2 நிமிட வீடியோ இந்த நிகழ்ச்சியில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோவில் படம் குறித்து மட்டுமே விஜய் பேசவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக துபாயில் படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்ட நிலையில், அதுவும் ரத்தானது. இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி துபாயில் நடைபெறவுள்ளது ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான செய்தியாகவே அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X