Cheyyaru Balu: 1000 கோடி ரூபாய் வசூலை கண்டிப்பாக லியோ தாண்டும்.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சரியாக 37 நாட்களே உள்ளதாக ரசிகர்கள் நாட்களை எண்ணிக் கொண்டு வருகின்றனர். படத்தின் மீதான அவர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Actor Vijays Leo movie seems to be collect more than 1000 crores -Cheyyaru Balu says

விஜய்யின் லியோ படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என செய்யாறு பாலு உறுதி: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் அடுத்தமாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் ஷாருக்கானின் ஜவான் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படங்கள் வசூல்மழை பொழிந்து வருகின்றன. ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூல் ஏறக்குறைய 700 கோடி ரூபாய்களை நெருங்கியுள்ளது.

ஜெயிலர் மற்றும் ஜவான் படங்களின்மூலம் தங்களது பெஸ்ட்டை கொடுத்துள்ளனர் இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார் மற்றும் அட்லீ. இந்நிலையில் இவர்களின் மார்க்கெட் வேல்யூவும் இந்திய அளவில் மிகச்சிறப்பாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தன்னை நிரூபிக்கும் கட்டாயத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் அடுத்ததாக உள்ளார். இவரது லியோ படமும் இந்த ஆண்டிலேயே வெளியாகவுள்ள நிலையில், படத்தின்மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக அதிகரித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் விஜய்யின் லியோ படத்திற்கு சர்வதேச அளவில் மிக அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளதும் இதற்கு முக்கியமான காரணம். அதேபோல விஜய்யின் லியோ படத்தையும் அவர் ஹிட்டாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான திரைக்கதையும் இந்தப் படத்தை லோகேஷ் அணுகியுள்ளார். அதற்கேற்ப படத்தில் அடுத்தடுத்த அப்டேட்களும் மாஸ் காட்டி வருகின்றன.

சமீபத்தில் லண்டனில் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங்குகள் துவங்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக 6 வாரங்களுக்கு முன்பே இந்த டிக்கெட் புக்கிங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இந்திய அளவில் முதல் முயற்சியாக நடந்த இந்த நிகழ்வில் படக்குழுவினரும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் படத்தில் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் விஜய்யை வைத்து குட்டிக் கதையொன்றை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து இசை வெளியீட்டில் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி அவர் பேச வாய்ப்பில்லை என்றே தற்போது கூறப்படுகிறது. அவரது அரசியல் பிரவேசம் குறித்த தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் கலெக்ஷன் சர்வதேச அளவில் 700 கோடிகளை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த கலெக்ஷனை விஜய்யின் லியோ படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி நடக்க சாத்தியமே இல்லை என்று சமீபத்தில் நடிகர் மீசை ராஜேந்திரன் தனது பேட்டியில் பேசியிருந்தார். 400 கோடி ரூபாய்களை தாண்டி லியோ படம் வசூலிக்காது என்றும் ரஜினி பட வசூலை முறியடிக்காது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கண்டிப்பாக இந்தப் படம் சிறப்பான ப்ரமோஷன்களை மேற்கொள்ளும் சூழலில் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை மேற்கொள்ளும் என்று சினிமாவின் மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு உறுதி தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் எட்டியுள்ள நிலையில் இந்தப் படம் குறித்து செய்யாறு பாலு கூறியுள்ள தகவல்கள் ரசிகர்களை மேலும் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

வெளிநாட்டில் வாரிசு படத்துடன் ஒப்பிடுகையில் லியோ படத்தின் வெளியீட்டு உரிமை 3 மடங்கு அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடுகளில் பேமிலி ஆடியன்சை அதிகமாக கவரும் வகையில் பல ப்ரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர். துபாயின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இந்தப் படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளிலும் நடக்கவுள்ள ப்ரமோஷன்களில் விஜய் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X