Leo sensor: தள்ளிப்போன லியோ படத்தின் சென்சார்.. விஜய்யின் அடுத்தடுத்த சவால்கள்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் வேலைகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் ரிலீஸ் வரும் அக்டோபர் 19ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக லியோ ரிலீசாகவுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீடு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிக அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
விஜய்யின் லியோ பட சென்சார் தள்ளி வைப்பு: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த 30ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த படத்தின் இசை வெளியீடு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகினர். சமீப காலங்களில் அதிகமான அரசியல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திவரும் நடிகர் விஜய், இந்த இசை வெளியீட்டின்போது, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை அவர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளன.

வரும் 5ம் தேதி படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் அக்டோபர் 3ம் தேதி படத்திற்கான சென்சார் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. லியோ படம் விஜய் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்திற்கு அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு வருவது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தில் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் இணைந்துள்ளார். பார்த்திபன், லியோ என இருவேறு கெட்டப்புகளில் அவர் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்யுடன், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.
படத்தின் சென்சார் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள லியோ படத்திற்கு போதிய ப்ரமோஷனை செய்யாமல் உள்ள தயாரிப்பு தரப்பு மீது ரசிகர்கள் அதிகமான அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. லியோ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், படத்திற்கு அதிகப்படியான பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி #WakeUp7ScreenLalith என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











