Vijay speech: சினிமாவை சினிமாவா பாருங்கய்யா.. வெற்றிவிழாவில் விஜய் பளீச் பேச்சு!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் 500 கோடி ரூபாய் வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபிசில் தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும்வகையில் நேற்றைய தினம் சென்னையில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் லோகேஷ், ரத்னகுமார் உள்ளிட்ட இயக்குநர்களும் கலந்துக் கொண்டனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லியோ படம் கடந்த இரு வாரங்களில் சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
லியோ சக்சஸ் மீட்: இந்த நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற நிலையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் படம் குறித்த பல சுவாரஸ்யங்களை இவர்கள் அனைவரும் பகிர்ந்துக் கொண்டனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு மற்றும் குட்டி ஸ்டோரி உள்ளிட்டவை ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்திருந்தது.
விஜய் பேச்சு: சமூக வலைதளங்களில் கொஞ்ச நாளாக ரசிகர்களின் கோபம் அதிகமாக இருப்பதாக சுட்டிக் காட்டிய நடிகர் விஜய், அதெல்லாம் வேண்டாம் என்றும் இந்த அளவிற்கு கோபம் உடம்பிற்கு நல்லதில்லை என்றும் கூறினார். மேலும் காந்தி சொன்னது தான் நியாபகம் வருவதாகவும் வன்முறையைவிட வன்முறையில்லாத நிலையே நல்லது என்றும் விஜய் தெரிவித்துள்ளார். நமக்கு அதிகமான வேலைகள் இருப்பதாகவும் அவர் கூறியது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது.
நா ரெடி பாடல் குறித்து விஜய்: விஜய் நடிப்பில் முதல் சிங்கிளாக வெளியானது நா ரெடி பாடல். இந்தப் பாடலின் வரிகள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நேற்றைய தினம் இந்தப் பாடல் குறித்து பேசிய விஜய், விரல் இடுக்கில் தீப்பந்தம் என்றால் ஏன் சிகரெட்டாக நினைக்கிறீர்கள், அது பேனாவாககூட இருக்கலாம். நாளைய தீர்ப்பை மாற்றும் பேனாவாகக்கூட இருக்கலாம் இல்ல என்று அவர் ரசிகர்களிடையே கேள்வி எழுப்பினார்.

பாடல் குறித்து விளக்கம்: தொடர்ந்து அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க என்றால் சரக்கா தான் இருக்கனுமா குடிக்கற கூழா கூட இருக்கலாமே என்றும் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக மாட்டேன் என்றும் சினிமாவை சினிமாவாக பாருங்கய்யா என்றும் விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். லியோ படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்திருந்த நிலையில் நா ரெடி பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











