Leo: தமிழகத்தில் 1100 திரையரங்குகளில் வெளியாகும் லியோ படம்.. ஸ்பெஷல் காட்சிக்கு திட்டமிடும் டீம்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 5ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1100 திரையரங்குகளில் ரிலீசாகும் விஜய்யின் லியோ படம்: நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் சிறப்பான வசூலை பெற்றது. தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் -விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ள லியோ படத்தில் இருவேறு கெட்டப்புகளில் அவர் காணப்படுகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் கடந்த பிப்ரவரியில் துவங்கப்பட்டு 52 நாட்கள் தொடர்ந்து நடித்தப்பட்டது. அடுத்ததாக சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் லியோ படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. தலக்கோணத்தில் ஏராளமான ரசிகர்கள் விஜய்யை பார்க்க குவிந்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் மற்ற மாநில ரசிகர்களும் விஜய்யை கொண்டாடி வருவது கண்கூடாக தெரிந்தது.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டனில் இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் 6 வாரங்களுக்கு முன்னதாகவே நடத்தப்பட்ட நிலையில் 24 மணிநேரத்திற்குள்ளாகவே இந்தப் படத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 5ம் தேதி துபாயில் திட்டமிடப்பட்டுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து லண்டன், துபாய் உள்ளிட்ட இடங்களில் படத்தின் ப்ரமோஷன் மிகவும் சிறப்பாக திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தப் படத்தின் வசூல் 1000 கோடி என கணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, வெளிநாடுகளிலும் ப்ரமோஷன்களில் விஜய் பங்கேற்றால் மட்டுமே இந்த வசூலை எளிதாக எட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக மிகப்பெரிய அளவில் தற்போதே டோக்கனை போட்டுள்ளதால் திரையரங்க உரியமையாளர்கள் தற்போது படத்திற்கான காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் லியோ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அப்படி இதற்கான அனுமதி கிடைக்காத பட்சத்தில் வடபகுதியை சேர்ந்த ரசிகர்கள் பெங்களூருவிற்கும் தென்பகுதியை சேர்நத ரசிகர்கள் கேரளாவிற்கும் படையெடுக்கும் சூழல் உருவாகும். இதை தவிர்க்க தமிழகத்திலேயே சிறப்பு காட்சிகள் மேற்கொள்ளப்பட்டால் திரையரங்க உரிமையாளர்கள் தங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் லியோ படம், இவற்றையெல்லாம் கடந்து 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











