Leo trailer: அக்டோபர் 5ம் தேதி லியோ ட்ரெயிலர் ரிலீஸ்.. அதிரடி போஸ்டருடன் லோகேஷ் அப்டேட்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Actor Vijays Leo movie trailer to be release on October 5th

படத்தின் இரண்டு பாடல்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்த பாடல் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ள லியோ பட ட்ரெயிலர்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. முன்னதாக விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள லியோ படத்திற்கான பிரமோஷன்களை அதிகரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

லியோ படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி படத்தின் இசை வெளியீடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த இசை வெளியீடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய அரசியல் நுழைவு குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்தும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் குறித்தும் படக்குழுவினர் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளனர். வரும் அக்டோபர் 5ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக தற்போது அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vijays Leo movie trailer to be release on October 5th

படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் அதிரடி போஸ்டருடன் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீஸ் குறித்த பல்வேறு சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றிற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாகவும் லோகேஷ் அறுதியிட்டு கூறியுள்ளார். மேலும் பனிபடர்ந்த பின்புலத்தில் காட்டு விலங்குடன் விஜய் மோதும் புகைப்படமும் இந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், தயாரிப்பு தரப்பான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ உள்ளிட்டவர்களும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான ஜெயிலர், ஜவான் உள்ளிட்ட படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அந்த வரிசையில் உள்ள லியோ படமும் சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X