ஆசை ஆசையாய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ். காரை விற்க முடிவு செய்த விஜய்.. விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: தளபதி விஜய் ஆசை ஆசையாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக விற்பனையாளர்கள் இன்ஸ்டா வலைதளத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரை விதவிதமாக போட்டோக்களை எடுத்து பதிவிட்டுள்ளனனர்.
நடிகர் 2012ம் ஆண்டு பிரிட்டனில் இருந்து 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' வகை சொகுசு காரை வாங்கியிருந்தார். காரை வாகன பதிவுக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றபோது, அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஏன் என்றால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் காருக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டால்தான் வாகனத்தை பதிவு செய்ய முடியும் என்பதால், அவ்வாறு உத்தரவிடப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்: இதனால், அதிர்ச்சியடைந்த விஜய், நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் வழக்கு தொடர காரணம், , காரின் விலையை விட இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் பல வரிகளால், தொகை அதிகமாக இருந்தது.
விஜய்க்கு அபராதம்: இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் புகழ்பெற்ற நடிகர் என்பதால் உரிய நேரத்தில் சரியான வரி செலுத்த வேண்டும் அதுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதையும் வலியுறுத்தி, வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு, விஜய் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் கட்ட சொல்லி உத்தரவிட்டது. இந்த வழக்கு 2021ம் ஆண்டு சோஷியல் மீடியாவிலும் செய்திகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
காரின் விலை 3.5 கோடி: நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை 3.5 கோடி ரூபாயாகும், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்1 வகையை சேர்ந்த அந்த கார், லிட்டருக்கு ஐந்து முதல் எட்டு கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் 250 கிலோமீட்டராகும், இந்த காரை இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் விஜய், தனுஷ் ஆகியோர் வைத்திருக்கிறார்கள்.
ஆசை ஆசையாய் வாங்கிய கார்: மினிகூப்பர், இனோவா, பிஎம்டபிள்யூ என விஜய் பல கார்களை வைத்திருந்தாலும், இந்த கார் மீது அவருக்கு தனிப்பிரியம் உண்டு, அப்படி ஆசை ஆசையாக வாங்கிய கார், Empire Autos எனும் ப்ரீமியம் கார் டீலர்ஷிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்காக காரை பல ஆங்கிளில் போட்டோக்கள் எடுக்கப்பட்டு அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை, 2.6 கோடி ரூபாய் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











