Vijay: அரசியல் நடிப்பை துவங்கினாரா விஜய்? பெற்றோருடன் சந்திப்பு குறித்து ரசிகர்கள் கமெண்ட்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங்கை அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு செய்துள்ள சூழலில் அடுத்ததாக தளபதி 69 படத்தில் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு அடுத்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக முன்னதாக அறிவித்துள்ளார். இதனிடையே நீண்ட காலங்களாக மனக்கசப்பு காரணமாக தன்னுடைய தந்தை இயக்குனர் எஸ்ஏசி-யை சந்திப்பதை தவிர்த்து வந்த விஜய் தற்போது தனது பெற்றோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் சில விமர்சனங்களையும் பெற தவறவில்லை.

Actor Vijay s meeting with his parents makes controversies

நடிகர் விஜய்: நடிகர் விஜய் 30 ஆண்டுகளைக் கடந்து சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். இளைய தளபதியாக இவரது என்ட்ரி சினிமாவில் இருந்த சூழலில் தற்போது ரசிகர்களால் தளபதி என்று கொண்டாடப்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள விஜய், தொடர்ந்து தற்போது நடித்து வரும் கோட் மற்றும் அடுத்ததாக நடிக்கவுள்ள தளபதி 69 படங்களை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய கட்சியின் அடுத்தடுத்த வளர்ச்சி குறித்து அவர் திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் அரசியல் என்ட்ரி: கடந்த ஆண்டில் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு பரிசுகளையும் சான்றிதழையும் கொடுத்து மாஸ் காட்டினார் விஜய். இந்நிலையில் இந்த ஆண்டும் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கவுள்ளதாக அவரது கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள சூழலில் கட்சியின் மாநாடும் விரைவில் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார் விஜய். அம்மாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தபோதிலும் தன்னுடைய அப்பா எஸ்ஏசியுடன் மனக்கசப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அப்பாவுடன் மனக்கசப்பு: தற்போது மாஸ் நடிகராக ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய், ஒரு காலகட்டத்தில் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில்தான் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய அப்பா இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் என்ட்ரி கொடுத்த இவர், முன்னதாக சிறுவனாகவும் பல படங்களில் எஸ்ஏசி இயக்கத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் தொடர்ந்து தன்னுடைய அப்பாவுடன் சந்திப்பை தவிர்த்து வந்தார். இருந்தபோதிலும் தன்னுடைய அம்மாவுடன் தொடர்ந்து நல்ல உறவை மெயின்டெயின் செய்து வந்தார்.

பெற்றோருடன் விஜய் சந்திப்பு: சமீபத்தில் தன்னுடைய அம்மாவிற்காக சாய்பாபா கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்திருந்தார் விஜய். 8 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோயிலை அவர் கட்டிக் கொடுத்துள்ள சூழலில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தன்னுடைய அம்மாவுடன் இந்த விழாவில் பங்கேற்று இருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய அப்பா மற்றும் அம்மா இருவரையும் விஜய், அவர்களது வீட்டில் சென்று திடீரென சந்தித்துள்ளார். இதன் புகைப்படத்தை இயக்குனர் மற்றும் விஜய்யின் அப்பா எஸ்ஏசி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளன.

விஜய்யின் அரசியல் நாடகம்?: தொடர்ந்து விஜய் குறித்த பலரின் வெறுப்பான கமெண்ட்களுக்கு இந்த புகைப்படம் பதிலடியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். ஒரு சிலர் விஜய் தன்னுடைய அரசியல் நாடகத்தை துவங்கி விட்டதாகவும் இந்த புகைப்படத்தின்கீழ் கமெண்ட் செய்துள்ளனர். எதுவாக இருந்த போதிலும் நீண்ட காலங்களாக அப்பா மற்றும் மகனுக்கு இடையில் இருந்து வந்த மனக்கசப்பிற்கு தற்போது தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X