Shoba Chandrasekar: அம்மாவின் நீண்டநாள் ஆசை.. நிறைவேற்றி வைத்த விஜய்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தன்னுடைய சொந்த நிலத்தில் சாய்பாபாவிற்கு கோயில் கட்டி உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு படங்களுடன் செய்திகள் வெளியாகின. அந்த கோயிலின் பூசாரிகளுடன் சேர்ந்து விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் இன்றைய தினம் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர் அந்த கோயிலுக்கு விசிட் செய்துள்ளார். தன்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விஜய் சாய்பாபாவிற்கு கோயில் கட்டி உள்ளதாகவும் பக்தர்கள் அனைவரும் இந்த கோயிலுக்கு வருகை தந்து பாபாவின் அருளை பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Actor Vijay s mother hails his son for Sai baba temple in his own land

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் அறிவித்திருந்தார். மேலும் தான் படங்களில் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 69 படங்களை தொடர்ந்து தான் நடிப்பிலிருந்து விலக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த இரு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

GOAT படம்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டின் தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது, அதன் படப்பிடிப்பு லொகேஷன் புகைப்படங்கள் மற்றும் விஜய்யின் ஸ்கேட்டிங் பயிற்சி வீடியோக்கள் ஆகியவற்றை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார், இவை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது,

விஜய் கட்டிய பாபா கோயில்: இன்னும் இரு வாரங்களில் GOAT படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சென்னை கொரட்டூரில் சாய் பாபாவிற்கு தன்னுடைய சொந்த நிலத்தில் கோயில் கட்டியுள்ளதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகின. அந்த கோயிலின் அர்ச்சகர்களுடன் விஜய் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் இன்றைய தினம் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், இந்த கோயிலுக்கு வந்ததன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சி: மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஷோபா, தன்னுடைய நீண்ட நாள் கோரிக்கையான சாய்பாபாவிற்கு கோயில் கட்டும் பணியை விஜய் நிறைவேற்றி வைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வருவதாகவும் பக்தர்களும் அதிகமான அளவில் கோயிலுக்கு வந்து பாபாவின் ஆசியை பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் கிறிஸ்தவராக இருந்த போதிலும் அவர் பாபாவிற்கு கோயில் கட்டி உள்ளது ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X