Leo Success Meet: அம்மான்னா சும்மா இல்லடா.. லியோ வெற்றி விழா.. ஷோபா சந்திரசேகர் பங்கேற்பு.. அப்பா?
சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக அரங்கேறி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான விஜய்யின் லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், வெற்றி விழா நடைபெற்று வருகிறது.

இத்தனை வருடங்களில் விஜய் நடித்த படங்கள் எதுவுமே இந்த அளவுக்கு வசூல் ஈட்டாத நிலையில், லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணைந்து நடித்த லியோ திரைப்படம் 550 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீரடிக்கு கிளம்பிய அப்பா: நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான சந்திரசேகர் உடல் நலக்குறைவால் சமீபத்தில் சிகிச்சை பெற்ற நிலையில், அப்பாவை பார்க்க விஜய் ஓடோடி வந்திருந்தார். இந்நிலையில், லியோ வெற்றி விழாவில் சந்திரசேகர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது நண்பர்களுடன் சீரடிக்கு விமானத்தில் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்மான்னா சும்மா இல்லடா: மற்ற எந்த சொந்தமும் வரவில்லை என்றாலும் அம்மா எப்போதுமே ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்கு உதாரணமாக ஷோபா சந்திரசேகர் லியோ வெற்றி விழாவுக்கு முன்கூட்டியே வந்துள்ள காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

மடோனா வருகை: நடிகர் விஜய்யின் மனைவி மற்றும் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றே தெரிகிறது. மடோனா சபாஸ்டியன், ரத்னகுமார், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.


Click it and Unblock the Notifications











