நாங்கள் டாக்டர் டாக்டர் என்று சொன்னோம்.. விஜய் ஆக்டர் ஆக்டர் என்று சொன்னார்.. ஷோபா சந்திரசேகர் பளீச்
சென்னை: நடிகர் விஜய் தற்போது தன்னுடைய இறுதிப் படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் சூட்டிங் தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய அப்பா சந்திரசேகருடன் கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்த விஜய், தன்னுடைய கட்சி அறிவிப்பை தொடர்ந்து தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய்யின் கட்சியின் முதல் மாநாட்டில் இவர்கள் இருவரும் பங்கேற்றதையும் பார்க்க முடிந்தது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்து சினிமா, அரசியல் என தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளை கடந்து அவர் சினிமாவில் ஹீரோவாக தன்னை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அடுத்ததாக அரசியல் களத்திலும் அவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் இவரது தவெக மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. தற்போது நடித்துவரும் தளபதி 69 படம் தனது இறுதி படம் என விஜய் முன்னதாக அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் சூட்டிங் கடந்த மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட்டு முதல் ஷெட்யூல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தளபதி 69 படம்: தற்போது 2வது ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே காம்பினேஷன் காட்சிகளை இயக்குநர் ஹெச் வினோத் எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக கடந்த வாரத்தில் பூஜா ஹெக்டே விமானம் மூலம் சென்னை வந்திருந்தார். அதன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய அப்பாவிடம் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பேசாமல் இருந்த விஜய், தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்த சில வாரங்களில் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றதையும் பார்க்க முடிந்தது.
விஜய் குறித்து ஷோபா சந்திரசேகர்: தொடர்ந்து தன்னுடைய அம்மா ஷோபா சந்திரசேகருடன் விஜய் இணக்கமாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னுடைய மகனின் இந்த வளர்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள ஷோபா சந்திரசேகர், தாங்கள் முன்னதாக விஜய்யை டாக்டராக்கவே நினைத்ததாக தெரிவித்துள்ளார். தாங்கள் டாக்டர், டாக்டர் என்று கூறிய நிலையில் விஜய்யோ ஆக்டர், ஆக்டர் என்று கூறி நடிகராகிவிட்டதாகவும் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார். தற்போது அவர் வேறு ஒரு பரிணாமம் எடுத்துள்ளதாகவும் ஷோபா சந்திரசேகர் தன்னுடைய மகிழ்ச்சியையும உற்சாகத்தையும் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் போராட்ட குணம்: சிறு வயதிலிருந்து தற்போதுவரை விஜய் என்ன நினைப்பாரோ அதைத்தான் செய்வார் என்றும் நினைத்ததை செய்து முடிக்காமல் விடமாட்டார் என்றும் அதுதான் விஜய்யின் குணம் என்றும் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எப்போதும் அம்மா பிள்ளையாகவே விஜய் இருந்து வருகிறார். தன்னுடைய அப்பாவிடம் பேசாமல் இருந்த காலகட்டங்களில்கூட இவர்கள் இருவரும் மிகச்சிறப்பாக பேசி வந்ததையும், அவ்வப்போது தன் கையால் சமைத்து விஜய்க்கு தான் கொடுத்த நிகழ்வுகளையும் ஷோபா சந்திரசேகர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.


Click it and Unblock the Notifications











