Shoba Chandrasekar: Just Looking like a wow.. விஜய் அம்மாவின் உற்சாக ரீல்ஸ் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய் 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட இவர் தற்போது தளபதியாக கொண்டாடப்படுகிறார்.

இவரது அப்பா பிரபல டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர். தற்போது இவர் விஜய் டிவியில் கிழக்குவாசல் சீரியலில் நடித்து வருகிறார்.

Actor Vijays mother Shoba chandrasekars new reels video impressed fans

விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும் பாடகி, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக காணப்பட்டவர். தற்போது மீடியாவில் இவர் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் சர்வதேச அளவில் மாஸான ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்து வருபவர். இளைய தளபதியாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக இருந்த விஜய் தற்போது தளபதியாக கொண்டாடப்பட்டு வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்: விஜய்யின் தந்தை பிரபல இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர். இவர் விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களை வைத்து படமியக்கியுள்ளார். விஜய் லீட் கேரக்டரில் நடித்த நாளைய தீர்ப்பு உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கியுள்ளார். தற்போது தன்னுடைய 78 வயதிலும் சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் சாமியப்பன் என்ற லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது நடிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.

ஷோபா சந்திரசேகர்: விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடகி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராக இருந்துள்ளார். முன்னதாக இசைக்குழுக்களில் பாடிக் கொண்டிருந்த இவர் திரைப்படங்களிலும் பாடத்துவங்கினார். சில கதைகளையும் இவர் எழுதியுள்ளார். தன்னுடைய கணவரின் இயக்கத்தில் வெளியான படங்களில் இவர் பாடல்களை பாடியுள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். நண்பர்கள், இன்னிசை மழை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ட்ரெண்டான ரீல்ஸ் வீடியோ: தற்போது தன்னுடைய மகன் குறித்த பேட்டிகளை அடிக்கடி கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் விஜய்யை அவ்வப்போது இவர் சந்திக்கும் வீடியோக்கள், புகைப்படங்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. இதனிடையே தற்போது ஷோபா சந்திரசேகர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையதளத்தில் ட்ரெண்டாகியுள்ளன. சமீபத்தில் ட்ரெண்டாகியுள்ள So Beautiful, so elegant, just looking like a WOW என்ற வீடியோவிற்குதான் தற்போது ஷோபா சந்திரசேகர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ட்ரெண்டான வார்த்தைகள்: ஜாஸ்மின் கவுர் என்பவர் தன்னுடைய துணிகளின் விற்பனைக்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்த, அது மிகவும் ட்ரெண்டாகியுள்ளது. பலரும் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த வார்த்தைகளை பாடலாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிகமான நபர்களை இந்த வீடியோக்கள் கவர்ந்து வரும் நிலையில் தற்போது இந்த பாடலின் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ஷோபா சந்திரசேகரும் தான் ட்ரெண்டிங்கில் உள்ளதை நிரூபித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X