Leo movie: நா ரெடி பாடலுக்கு தொடரும் கண்டனங்கள்.. லியோ டீம் செஞ்ச வேலையை பாருங்க!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் சூட்டிங் தற்போது தலக்கோணத்தில் நடைபெற்று வருகிறது.

இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான நா ரெடி பாடல் 3 மில்லியன் வியூஸ்களை கடந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கண்டனங்களை தொடர்ந்து நா ரெடி பாடலில் செய்யப்பட்ட மாற்றம்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் லியோ படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 52 நாட்கள் இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில், அதிகமான குளிர், நிலநடுக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கிடையில் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு பாடல் காட்சிகள், க்ளைமாக்ஸ் உள்ளிட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன.

Actor Vijays Naa ready Song in Leo movie faces more controversies

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் ஆந்திர மாநிலம் தலக்கோணத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெளியில் வந்து, அவர்களை நோக்கி கையசைத்தார் விஜய். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தில் விஜய்யின் போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதை தொடர்ந்து படத்தின் சில பேட்ச் வேலைகளையும் மேற்கொண்டு, மேலும் சில தினங்களில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவும் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட உள்ளது. படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பல விஷயங்களை தொடர்ந்து லலித்குமார், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் பாடல் கடந்த 5 நாட்களில் 33 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ஒருபுறம் இந்தப் பாடலுக்கு அதிகமான கண்டனங்களும் கிடைத்து வருகின்றன. அதிகமான ரசிகர்கள் பாலோ செய்யும் ஒரு நபர், வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு அந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளது பல்வேறு எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

அதற்கேற்றாற்போல, இளம் பெண் ஒருவர், வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு இந்தப் பாடலுக்கு, விஜய்யின் அதே லுக்கில் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தொடர் கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்துவரும் லியோ டீம், தற்போது இந்தப் பாடலுக்கான லிரிக் வீடியோவில், புகைப்பிடித்தல் புற்று நோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும் என்ற வாசகத்தை பாடலில் இணைத்துள்ளது.

முன்னதாக திருமலை படத்திலும் இதே போன்ற லுக்குடன் விஜய் காணப்படும் புகைப்படங்களும் வெளியாகியது. விஜய் மாணவர்களை அதிகமாக ஃபோகஸ் செய்கிறார். சமீபத்தில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு விஜய், பரிசுத்தொகை கொடுத்து ஊக்குவித்ததும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அவர் பாடலில் நடித்துள்ளது மிகப்பெரிய விமர்சனங்களை கொடுத்துள்ளது.

அதை படத்தின் ஒரு காட்சியாகத்தான் பார்க்க வேண்டும் என்று ஆயிரம் காரணங்கள், சமாளிப்புகள் சொல்லப்பட்டாலும், இதையெல்லாம் இளைய சமுதாயம் கருததில் கொள்ளாது. தன்னுடைய தலைவன், இதுபோன்ற ஸ்டைலான ஒரு பாடலுக்கு வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, நடித்துள்ள நிலையில், அதை நாமும் முயற்சித்தால் என்ன என்பதாகவே அவர்களின் மனநிலை காணப்படும். தற்போது, சிகரெட் பிடிப்பதன் தீமையை வலியுறுத்தி வாசகங்கள் போடப்பட்டாலும், பிற்காலங்களில் இதுபோன்ற காட்சிகளை தவிர்ப்பதே விஜய்க்கு சிறப்பாக அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X