Actor Vijay: கோட் படத்திற்காக முதல் முறையாக விஜய் செய்த செயல்.. அட அப்படியா?
சென்னை: நடிகர் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷன்களை கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே விஜய் நிறைவு செய்துள்ளார். இதனிடையே பாண்டிச்சேரியில் நடிகர் ஜெயராம் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின் பேட்ச் வேலைகள் இரவு நேர சூட்டிங்காக நடந்து வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் 50 சதவிகித டப்பிங் வேலையையும் முன்னதாகவே விஜய் முடித்துக் கொடுத்துள்ள சூழலில் விரைவில் மீதமுள்ள டப்பிங் வேலைகளையும் அவர் துவங்கிய முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் அடுத்தடுத்த வேலைகளை ஒவ்வொன்றாக படக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில தினங்கள் படத்தின் பேட்ச் வேலைகள் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்னதாகவே தன்னுடைய போர்ஷன்களை முடித்துக் கொடுத்துவிட்டார். டீ ஏஜிங் வேலைகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்த விஜய் அந்த வேலைகளையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகளிலும் 50 சதவிகிதத்தை அவர் முன்னதாகவே நிறைவு செய்த நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள ஷூட்டிங்கிற்கான டப்பிங்கை அவர் விரைவில் துவங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5 ரிலீஸ்: வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் தன்னுடைய படங்களில் தன்னுடைய கேங்கை எப்போதுமே இணைத்து வருகிறார் வெங்கட் பிரபு. அந்த வகையில் இந்த படத்திலும் வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்தில் அப்பா -மகன் என இரு வேறு கெட்டப்களில் விஜய் இணைந்துள்ள சூழலில் டைம் ட்ராவலை மையமாகக் கொண்டு சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் கோட் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஜய் புதிய முயற்சி: முன்னதாக சிம்பு நடிப்பில் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு வெளியான வெங்கட் பிரபுவின் மாநாடு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த நிலையில் விஜய்யின் கோட் படமும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் இணையவுள்ளார். இந்த படத்துடன் அவர் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக முன்னதாக அறிவித்துள்ள சூழலில் தற்போது கோட் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள சூழலில் இதுவரை இல்லாத அளவில் விஜய் இந்த படத்தில் புதிய ஒரு முயற்சியை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு பாடல்களை பாடிய விஜய்: படத்தில் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து யுவன் சங்கர் ராஜாவும் தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனிடையே, பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் பேட்ச் வேலைகள் தற்போது நடிகர் ஜெயராமை வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவுக்காட்சியாக இந்த சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் அல்லது டீசர் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











