Jasan Sanjay: ஹீரோ மெட்டீரியலா ஜேசன் சஞ்சய்.. தொடர் ட்ரெண்டிங்கில் விஜய் மகன்!
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அடுத்ததாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். லைகா நிறுவனத்துடன் அவர் கைகோர்த்துள்ளார்.
தன்னுடைய அப்பா எடுத்துள்ள மாஸ் ஹீரோ அவதாரத்திற்கு எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும என்பதே விஜய் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஜேசன் சஞ்சய்: நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தின்மூலம்தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். துவக்கத்தில் தன்னுடைய தந்தையின் துணையுடன் அடுத்தடுத்து அவருடைய இயக்கம் மற்றும் தயாரிப்பில் நடித்துவந்த விஜய், கல்லூரி மாணவன் கேரக்டரில்தான் நடித்துவந்தார். அதிலேயே அதிரடி காட்சிகளையும் புகுத்தியிருந்தார் எஸ்ஏசி. மாண்புமிகு மாணவன் உள்ளிட்ட படங்கள் அதிகமாக ரசிகர்களை கவராத நிலையில், மற்ற இயக்குநர்களுடன் கைகோர்த்த விஜய்க்கு ஆக்ஷனை விட சென்டிமெண்ட், காதல் படங்கள் சிறப்பாக கைக்கொடுத்தன. தன்னை தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக அடையாளப்படுத்தியுள்ளார் விஜய்.
இத்தகைய அளவில் தன்னுடைய உயரத்தை அதிகரித்துள்ள விஜய்க்குகூட துவக்கத்தில் தன்னுடைய தந்தையின் சப்போர்ட் சினிமாவில் தேவைப்பட்டது. ஆனால் அவரது மகன் ஜேசன் விஜய், விஜய்யின் எந்தவித இடையூறும் இல்லாமல் தன்னுடைய பாதையை தானே தேர்வு செய்துள்ளார். அவர் நடிக்க வேண்டும் என்பதே விஜய்யின் ஆசையாக இருந்ததாக தெரிகிறது. ஆனால் சஞ்சய் இயக்குநர் துறையை தன்னுடைய கனவாக கொண்டு, அதையே தன்னுடைய துறையாகவும் தேர்ந்தெடுத்துள்ளார்.
அவருக்கு டைரக்ஷனில்தான் ஆர்வம் அதிகம் என்று முன்னதாக விஜய் பேட்டியொனறில் தெரிவித்திருந்தார். தன்னுடைய மகனின் கனவு குறித்து அறிந்த தந்தையாக, அதை ஊக்குவித்து, அதற்கான படிப்புகளை படிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் விஜய். இந்நிலையில், அடுத்தடுத்து தயாரிப்பு, ஸ்கிரிப்ட் ரைட்டிங் என இயக்குநர் துறைக்கு தேவைப்படும் படிப்புகளையும் முடித்துள்ளார் சஞ்சய். இந்தப் படிப்புகளுடன் குறும்படம் ஒன்றையும் இயக்கி சர்வதேச அளவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் சஞ்சய்.
இதையடுத்து தற்போது சஞ்சய் விவரித்த கதை பிடித்தே லைகா தற்போது அவரை தங்களின் தயாரிப்பிற்காக தேர்ந்தெடுத்துள்ளது. சரியான சுதந்திரத்தையும் லைகா கொடுத்துள்ளதாக சஞ்சய் தனது பேட்டியில் உற்சாகம் தெரிவித்துள்ளார். முன்னதாக விஜய்யின் போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்களில் பாடல்களில் நடித்துள்ள சஞ்சயை நடிக்க வைக்க பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர். இயக்குநர் ராஜ்குமாரும், தன்னுடைய படத்தில் சஞ்சயை, தனது மகளுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதிலெல்லாம் சிக்காமல் தன்னுடைய இயக்குநர் கனவை தற்போது நனவாக்கியுள்ளார் சஞ்சய். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ள சஞ்சய் குறித்தே கோலிவுட்டில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. எதிர்பார்க்காத இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையொட்டி ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார் சஞ்சய்.
மேலும் ஜேசன் சஞ்சயின் இந்த இயக்குநர் கனவு வெற்றிப்பெறவும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அவர் ஹீரோவிற்கான மெட்டீரியல் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய குறும்படங்கள் போன்றவற்றின்மூலம் தன்னை நிரூபித்துள்ள சஞ்சய், தனக்கு லைகா நிறுவனத்தின்கீழ் பணிபுரிய கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











