Jasan Sanjay: கோகோ கோலாவை பிரமோட் செய்தாரா சஞ்சய்.. விஜய் பட டயலாக் என்னாச்சு?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசுக்காக பரபரப்பாக தயாராகி வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி படத்தின் இசை வெளியீட்டிற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் விஜய். படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தன்னுடைய நீண்ட நாள் இயக்குநர் கனவிற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். லைகா நிறுவனத் தயாரிப்பில் அவர் படம் இயக்கவுள்ளார்.

Actor Vijays Son Sanjay contract signed photo makes controversies

விஜய் மகன் சஞ்சய் ஒப்பந்த புகைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை: நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரியில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து இந்த ஆண்டிலேயே அவரது லியோ படம் ரிலீசாகவுள்ளது. வருடத்திற்கு ஒரு படம் என்ற வகையில் அவரது படங்கள் ரிலீசான நிலையில், இந்த ஆண்டிலேயே அவரது இரண்டு படங்கள் ரிலீஸ் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளதாக சூட்டிங்கிற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 5ம் தேதி படத்தின் இசை வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய தளபதி 68 படத்தின் அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பூஜை மற்றும் சூட்டிங், லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விஜய், அப்பா -மகன் என இருவேறு ரோல்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு கேரக்டரில் Raw Agentஆக விஜய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டில் சினிமாவிற்கான படிப்புகளை படித்துவந்த விஜய்யின் மகன் சஞ்சய் தனது இயக்குநர் கனவிற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளார். லைகா தயாரிப்பில் இணைந்துள்ள சஞ்சய் குறித்து நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் லைகா அறிவித்துள்ளது.

Actor Vijays Son Sanjay contract signed photo makes controversies

இதில் இயக்குநருக்கான ஒப்பந்தத்தில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திடுவதாக புகைப்படம் காணப்பட்டது. ஜேசன் கையெழுத்திடும் அந்த டேபிளில் கோகோ கோலா பாட்டில்கள் இருந்தது தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர நோக்கத்துடன் இந்த பாட்டில்கள் வைக்கப்பட்டதா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக கத்தி படத்தில் தாமிரபரணி ஆற்றில் கோலா கம்பெனி ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாகவும் இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அந்தப் படத்தில் பேசியிருப்பார்.

இந்நிலையில், சஞ்சய் இயக்குநராக முதல்முறையாக கையெழுத்திடும் ஒப்பந்தத்தின் இடையில் கோலா பாட்டில்கள் காணப்படுவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் வசனமெல்லாம் ரசிகர்களுக்கு மட்டும்தானா, தன்னுடைய வீட்டிற்கு அது பொருந்தாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் லியோ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு வரும்நிலையில், நிகழ்ச்சியில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X