சிறப்பு குழந்தையை துள்ளி குதிக்க வைத்த நடிகர் விஜய்.. வாயடைத்துப்போன மருத்துவ உலகம்!
சென்னை: நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் சொந்தக்காரராக உள்ளார். இவருக்கு பெரிய வயது ரசிகர்கள் மட்டுமில்லாமல் சிறுவர்களும் அதிக அளவில் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் விஜய் படங்களின் ரிலீஸை அனைவரும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கோட் படத்தின் ரிலீசும் இத்தகைய கொண்டாட்டத்திற்கு உள்ளானது.
விஜய்யின் கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படத்தின் சர்வதேச வசூல் கடந்த நான்கு நாட்களில் 288 கோடி ரூபாயை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் என்பது ஒரு கொண்டாட்டத்தின் குறியீடாக பார்க்கப்படும் நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலக உள்ளது ஏராளமான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். 40 ஆண்டுகளைக் கடந்த இவரது திரைப்பயணம் துவக்கத்தில் வெற்றிகரமாக அமையவில்லை. ஹீரோவாகவும் 30 ஆண்டுகளை கடந்து இவர் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய்யின் 68வது படமாக ரிலீசாகியுள்ள கோட் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்திலும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்க்கு வயது முதிர்ந்த ரசிகர்கள் உள்ளதைப் போலவே இளம் வயது ரசிகர்களும் ஏராளமானோர் உள்ளனர்.
சிறப்பு குழந்தையை சந்தித்த விஜய்: விஜய்யின் கோட் படத்தை பார்த்து ஏராளமான சிறுவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை சில தினங்களுக்கு முன்னதாக ஏஜிஎஸ் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்நிலையில் சிறப்பு குழந்தை ஒன்று விஜய்யை சூட்டிங் ஸ்பாட்டில் கட்டியணைத்து பேச முயன்ற வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கோட் படத்தின் ஷூட்டிங்கின்போது அந்த சிறப்பு குழந்தையை விஜய் சந்தித்துள்ளார். வீல் சேரில் அமர்ந்திருந்த அந்த குழந்தை விஜய்யை பார்த்தவுடன் அவரை சென்று கட்டி அணைத்ததையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
விஜய் மாமா என கூறிய சிறுவன்: கன்னியாகுமரியை சேர்ந்த ரிஷான் என்ற அந்த சிறப்பு குழந்தை, முதல் முறையாக திரையரங்கில் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை கேட்டு, உற்சாகமாக நடனம் ஆடியதாகவும் தொடர்ந்து விஜய் யார் என்ற கேள்விக்கு விஜய் மாமா என்று கூறியதாகவும் அவரது தாய் தற்போது தெரிவித்துள்ளார். விஜய்யுடனான இந்த சந்திப்பை தொடர்ந்து அந்த சிறுவனிடம் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மீண்டும் விஜயை சந்திக்க நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டு வாசலில் பல மணி நேரம் சிறுவனுடன் அவர் காத்திருந்த நிலையில் இந்த முறை விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கொண்டாடும் ரசிகர்கள்: மேலும் தன்னுடைய மகன் விஜய்யின் தீவிர ரசிகனாக உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள சிறுவனின் அம்மா, டிவியிலும் விஜய்யின் படங்களின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டால் அதை மாற்ற விடமாட்டான் என்றும் குறிப்பிட்டுள்ளார். விஜய் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் திருவிழாவாக கொண்டாடப்படும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அவர் அரசியலுக்கு செல்வது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் விஜய் என்ற கொண்டாட்டம் ரசிகர்களுக்கு இல்லாமல் போவது வருத்தத்திற்குரிய விஷயம் தான்.


Click it and Unblock the Notifications











