Thalapathy 68: மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகிறதா தளபதி 68.. இரட்டை வேடங்களில் விஜய்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

Actor Vijays Thalapathy 68 going to be a multi starrer movie

இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் தற்போது வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ளார்.

மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகும் விஜய்யின் தளபதி 68?: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டு முதல்கட்டமாக காஷ்மீரில் 52 நாட்கள் கடுமையான குளிர் மற்றும் நிலநடுக்கத்திற்கிடையில் நடத்தப்பட்டது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கை சென்னையிலும் தலக்கோணத்திலும் நடத்தி முடித்தனர். தலக்கோண சூட்டிங்கின்போது விஜய்யை பார்க்க கூடிய ஆந்திர ரசிகர்களையும் பார்க்க முடிந்தது.

நடிகர் விஜய் பான் இந்திய ஸ்டாராக உள்ளார். இவருக்கு சர்வதேச அளவில் அதிகமாக ரசிகர்கள் காணப்படுகின்றனர். தற்போது லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. மாஸ்டர் படத்தில் தன்னுடைய பங்கு 50 சதவிகிதம் மட்டுமே இருந்தததாக லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் லியோ படம் தன்னுடைய 100 சதவிகித படமாக அமையும் என்று முன்னதாக அவர் கூறியிருந்தார்.

லியோ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள விஜய், தற்போது வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் இறுதி வாரத்தில் அல்லது அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இசை வெளியீடு மலேசியா, சென்னை அல்லது மதுரையில் நடக்கவுள்ளதாக தெரிகிறது. விரைவில் இடம் இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்திலும் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து அக்டோபர் இறுதி வாரத்தில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் அரசியல் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா, பிரியங்கா மோகன் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வயதான மற்றும் இளைஞராக இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், வயதான விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் இளம் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் கமிட்டாகவுள்ளனர். விஜய்யின் லுக் டெஸ்ட் அடுத்த வாரத்தில் லண்டனில் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள நிலையில், மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகவுள்ளதாகவும் இதற்கான நடிகர்கள் தேர்வில் தற்போது வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X