Vijay's Thalapathy68: யூத்ஃபுல் லுக்கில் விஜய்.. அட இவருக்கு டி ஏஜிங் எல்லாம் எதுக்குப்பா?
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது தளபதி 68 படம்.

இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே பூஜையுடன் துவங்கிய நிலையில், தற்போது 15 நாட்கள் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தின் பூஜை வீடியோவை இன்றைய தினம் விஜயதசமியையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் படத்தின் நடிகர், நடிகைகள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
தளபதி விஜய்: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்து வாரயிறுதி மற்றும் விடுமுறை கொண்டாட்டங்களை அடுத்து இந்தப் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்து வருகிறது. மேலும் அடுத்த வாரத்திலும் படத்திற்கு மிகப்பெரிய அளவில் போட்டிப் படங்கள் எதுவும் வெளியாகாததால் படம் மேலும் அதிகமான கலெக்ஷனை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 நாட்களின் வசூல்: லோகேஷ் -விஜய் கூட்டணியில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் இரண்டாவது பாதி ரசிகர்களை கவர தவறியுள்ளது. இதனால் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த 5 நாட்களில் படத்தின் வசூல் சர்வதேச அளவில் 475 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. இன்றைய தினம் விஜயதசமியையொட்டி விடுமுறை தினம் என்பதால் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 68 பட பூஜை வீடியோ: இதனிடையே இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே தன்னுடைய அடுத்தப்படமான தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கிய நிலையில், கடந்த 15 நாட்களில் படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் அப்பா, மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில் படத்தில் மகன் விஜய்யை யூத்தாக காண்பிக்க டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற விஜய்: முன்னதாக இதற்கான ஸ்கேன் எடுப்பதற்காக விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார். இதன் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் இன்றைய தினம் விஜயதசமியையொட்டி படத்தின் பூஜை வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் இந்த பூஜையில் பங்கேற்றுள்ளனர்.

விஜய்யின் மாஸ் லுக்: இதனிடையே, இந்த பூஜையில் பங்கேற்ற விஜய்யின் லுக் மாஸாக அமைந்திருந்தது. மிகவும் யூத்ஃபுல்லாக அவரது லுக் இருந்தது. இவருக்கு டி ஏஜிங் தொழில்நுட்பம் எல்லாம் தேவையே இல்லை என்று ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல யூடியூபர்களும் கமெண்ட் செய்யும் வகையில் விஜய்யின் லுக் இருந்தது. இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி 68 படத்தின் டைட்டிலை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











