Thalapathy68: லுக் டெஸ்டை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தளபதி68 டீம்.. அட விஜய் வரலையா!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
இந்தப் படத்திற்காக விஜய், லாஸ் ஏஞ்சல்சில் லுக் டெஸ்ட் மேற்கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது.

விஜய்யின் லுக் டெஸ்ட்டை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தளபதி 68 டீம்: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. இந்தப் படத்தி போஸ்டர்கள், வீடியோக்கள், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. காஷ்மீரில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து கடுமையான குளிர், நிலநடுக்கம் இவற்றிற்கிடையில் நடந்து முடிந்த நிலையில், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களிலும் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
லியோ படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன்களும் அடுத்தடுத்து முடுக்கி விடப்பட்டுள்ளன. அக்டோபர் 5ம் தேதி படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் முன்னதாக படத்தின் டீசர், இரண்டாவது பாடல் உள்ளிட்டவை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துக் கொண்டிருந்தபோதே விஜய்யின் அடுத்தப்படமான தளபதி 68 குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் அடுத்ததாக உருவாகவுள்ளதாகவும் இதற்காக நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இருவேறு கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் ஒரு கேரக்டரில் Raw ஏஜெண்டாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் அப்பா கேரக்டருக்கு ஜோதிகா ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் மகன் கேரக்டருக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜோதிகா இந்தப் படத்தில் இடம்பெறவில்லை என்றும் சிம்ரன் அல்லது சினேகாதான் அப்பா விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழின் இரண்டு முன்னணி ஹீரோக்கள் களமிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர்கள் பிரஷாந்த் மற்றும் பிரபுதேவா இருவரும் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்பா, மகன் கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், இதற்காக லுக் டெஸ்ட் எடுப்பதற்காக சமீபத்தில் வெங்கட் பிரபு, விஜய் உள்ளிட்டவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அதன் புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின. இந்நிலையில் தற்போது லுக் டெஸ்டை முடித்துக் கொண்டு தளபதி 68 டீம் சென்னை திரும்பியுள்ளது. படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை விமானநிலையத்தில் நடிகர் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
லுக் டெஸ்ட்டில் பங்கேற்ற விஜய், சென்னை திரும்பவில்லை என்றே தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் லியோ படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு நார்வேயில் தன்னுடைய சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கிருந்துதான் அவர் லுக் டெஸ்ட்டிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் வந்திருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் தன்னுடைய சுற்றுலா கொண்டாட்டத்தை தொடர நார்வே சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டையொட்டியே சென்னை வரவுள்ளதாக தொடர்ந்து தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











