Thalapathy 68: தளபதி 68 படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்.. வெளியான தகவல்!

சென்னை: நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

படத்தின் சூட்டிங், பேட்ச் வொர்க் உள்ளிட்டவை நிறைவடைந்து தற்போது முழு வீச்சில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Actor Vijays Thalapathy 68 movie update released and fans feels great

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நார்வேயில் சுற்றுலா கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் உள்ளார். முன்னதாக அவர் லண்டனில் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளதாக கூறப்பட்டது.

தளபதி 68 படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்: நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ளது லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். காஷ்மீர், சென்னை, தலக்கோணம் என அடுத்தடுத்த இடங்களில் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் காஷ்மீரில் முகாமிட்ட படக்குழுவினர், படத்தில் எஞ்சியிருந்த பேட்ச் வொர்க்குகளையும் நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள விஜய் தற்போது வெளிநாட்டில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதையொட்டி அவர் விமானநிலையத்தில் காணப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது தளபதி 68 படத்திற்காக இணையவுள்ளார் விஜய். இந்தப்படம் ஆக்ஷன் என்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகவுள்ளது. படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள விஜய், நாடு திரும்பியதும் தளபதி 68 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Vijays Thalapathy 68 movie update released and fans feels great

முன்னதாக அஜித்தின் மங்காத்தா படத்தை அதிரடி சரவெடியாக கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. அஜித் கேரியரில் இந்தப் படம் பெஸ்டாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக அவர் இயக்கவுள்ள தளபதி 68 படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கை தன்னுடைய குழுவினருடன் கோவாவில் மேற்கொண்டார் வெங்கட் பிரபு. இந்நிலையில் லியோ படத்திற்கு இணையான வரவேற்பை அறிவிப்பிற்கு முன்னதாகவே தளபதி 68 பெற்று வருகிறது.

விஜய் படங்களில் ஒரு கேரக்டர் இருந்தாலே மாஸ் கிளப்பும். இந்நிலையில் இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு இனிப்பு கோலா ஐஸ் சாப்பிட்டதை போன்ற குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு மற்றும் சூட்டிங் துவக்கம் போன்றவற்றிற்காகவும் அடுத்தடுத்த அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் தற்போது முதலே காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் சிறப்பான செய்தி காத்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X