Thalapathy 68 Pooja: டிசர்ட்டில் விஜய்.. தளபதி 68 பூஜை வீடியோ இதோ.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்பதையும் பூஜை வீடியோ ரிவீல் செய்துள்ளது.

நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், மீனாக்ஷி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான நடிகர்களான தம்பி பிரேம்ஜி முதல் மொத்த விபி கேங்கும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
பல வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ள அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
வசூல் வேட்டையில் லியோ: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கடந்த 5 நாட்களாக மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹாலிவுட் படமான டிகாப்ரியோவின் படத்தின் வசூலையே வெளிநாட்டில் முறியடித்துள்ள லியோ திரைப்படம் 500 கோடி வசூலை இன்றுடன் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஹைப் ஆரம்பம்: லியோ படத்தை ஆரம்பித்து அதகளப்படுத்திய நிலையில், விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ஹைப்பை கொடுக்கும் விதமாக தளபதி 68 படத்தின் பூஜை விஜயதசமியை முன்னிட்டு இன்று வெளியானது. ஏற்கனவே 15 நாட்கள் ஃபர்ஸ்ட் ஷெட்யூலே முடிந்து விட்டதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
தளபதி 68 பூஜை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யின் தளபதி 68 படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த படத்துக்கு நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அர்ச்சனா கல்பாத்தி மீண்டும் விஜய் படத்தை தயாரிப்பதில் செம ஹேப்பி என ட்வீட் போட்டுள்ளார்.

பிரசாந்த் முதல் சினேகா வரை: தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாரிசு படம் போல குடும்ப பாங்கான படமாக தளபதி 68 வரும் என தெரிகிறது. பிரசாந்த், மைக் மோகன், பிரபு தேவா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி, லைலா, அஜ்மல், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











