அரசியல் படமில்லைன்னு சொன்னாங்க.. ஆனா.. தளபதி 69 அறிவிப்பை பார்த்து குழம்பிய ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் நீண்ட மாதங்களாக காத்திருந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேவிஎன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் என்பதும் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக விஜய்யின் லியோ படமும் ரிலீஸ் தேதியை படத்தின் அறிவிப்புடனேயே வெளியிட்டிருந்தது. அதேபோல தற்போது தளபதி 69 படமும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே நடிகர் விஜய் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கூறியுள்ள நிலையில், இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay thalapathy 69 movie kvn productiions 69

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சில கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றுள்ள போதிலும் அவற்றையெல்லாம் படத்தில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்யங்கள் மறக்கடிக்க செய்வதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. பான் இந்தியா படமாக வெளியான கோட் படம் மற்ற மாநிலங்களில் வரவேற்பை பெறாத நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 9 நாட்களில் படம் சர்வதேச பாக்ஸ் ஆபிசில் 450 கோடி ரூபாய் கலெக்ஷனை குவித்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கின் இடையிலேயே தளபதி 69 படத்தின் அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது.

தளபதி 69 அறிவிப்பு: ஆனால் தளபதி 69 படத்தின் அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப் போனது. இந்தப்படத்தினை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியான நிலையில், தயாரிப்பு நிறுவனம் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் இன்றைய தினம் தளபதி 69 படத்தின் அறிவிப்பை எளிமையாக வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் கோலிவுட்டில் கேவிஎன் நிறுவனம் தன்னுடைய முதல் தயாரிப்பை மேற்கொள்ளவுள்ளது. முதல் படத்திலேயே மாஸான கூட்டணியுடன் களமிறங்கியுள்ளது.

அக்டோபர் 2025 ரிலீஸ்: இந்தப் படத்தை முன்னதாக கூறப்பட்டது போல ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். முன்னதாக விஜய் -அனிருத் கூட்டணி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் விஜய்யின் இறுதிப்படத்திலும் அனிருத்தே இசையமைப்பாளராக களமிறங்கவுள்ளது ரசிகர்களை வெகுவாக உற்சாகம் கொள்ள செய்துள்ளது. விஜய் என்றாலே ஃபேன் பாயாக மாறி அனிருத் மாஸ் காட்டுவார் என்ற வகையில், இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுகால இடைவெளி: முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படமும் ரிலீஸ் தேதியுடனேயே தன்னுடைய அறிவிப்பை மேற்கொண்ட நிலையில், தற்போது அதே பாணியை ஹெச் வினோத்தும் மேற்கொண்டுள்ளார். தன்னுடைய படங்களை சரியான திட்டமிடலுடன் கொடுப்பவர் ஹெச் வினோத். முன்னதாக அஜித்தின் 3 படங்களை சரியாக ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கொடுத்திருந்தார். இதே திட்டமிடலுடன் அவர் விஜய் படத்தையும் அணுகுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்திற்கு சரியாக ஒரு ஆண்டுகாலம் இடைவெளி எடுததுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, தன்னுடை,ய அரசியல் பணிகளிலும் விஜய் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அரசியல் படமா?: முன்னதாக இந்தப்படம் அரசியல் கலவையுடன் உருவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இயக்குநர் தரப்பில் இதை மறுக்கப்பட்டது. விஜய்க்கான கமர்ஷில் அம்சங்களுடன் படம் உருவாகவுள்ளதாகவும் அரசியல் படம் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகிவுள்ள படத்தின் அறிவிப்பில் ஜனநாயகத்தின் தீபத்தை ஏற்றுபவர் விரைவில் வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படம் அரசியல் படமாகவே உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே, இதுகுறித்து ரசிகர்கள் இந்தப் படத்தின் அறிவிப்பில் தங்களது குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X