Actor Vijay: தளபதி 69 படத்தில் இணையும் பிரபல கேமராமேன்.. ஆட்டத்தை துவங்கிய ஹெச் வினோத்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவரும் சூழலில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய்யின் இறுதி படமாக உருவாகியுள்ள தளபதி 69 படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Vijay s Thalapathy 69 movie cameraman update revealed

நடிகர் விஜய்: நடிகர் விஜய் இறுதியாக நடிக்கவுள்ள படம் தளபதி 69. தற்போது சூட்டிங் நடந்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது. இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படத்தின் அறிவிப்பை விஜய் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தொடர்ந்து அப்டேட் வெளியாகி வருகின்றன. படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படும் சூழலில் இந்தப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 69 படம்: படத்தில் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எந்தவித அப்டேட்டும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த படத்தில் நடிகர் விஜய் 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தப் படத்தை காட்டிலும் இந்தப் படத்தில் அவரது சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே விஜய் அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் அவரது அரசியல் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் அவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தளபதி 69 கேமராமேன்: 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட உள்ள சூழலில் அவர் வெற்றி பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதனிடையே, தளபதி 69 படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ஹெச் வினோத்துடன் தீரன் மற்றும் விஜய்யின் மாஸ்டர் படங்களில் இணைந்து பணியாற்றிய சத்யன் சூரியன், தளபதி 69 படத்தில் கேமரா மேனாக இணையுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீரன் மற்றும் மாஸ்டர் படங்கள் ஒளிப்பதிவிற்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்ற நிலையில் அடுத்ததாக சத்யன் சூரியன் தளபதி 69 படத்தின் இணையவுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விரைவில் தளபதி 69 பட அறிவிப்பு: விரைவில் தளபதி 69 படம்குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள சூழலில், அடுத்தடுத்து படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் குறித்த அப்டேட்கள் வெளியாகும் இன்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தின் அப்டேட்டிற்காகவே ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியான சூழலில் அடுத்ததாக ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என்றும் அது படத்தின் மெலடி பாடலாக அமையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X