பீஸ்ட்டுக்கு வில்லன் அனிமல்.. பவர் மீட்ஸ் பவர்.. விஜய் பட அறிவிப்பு.. வார்த்தை விளையாட்டில் ரசிகாஸ்!
சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தின் கொண்டாட்டங்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், படம் அடுத்தக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. படம் வரும் 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓடிடியில் ரிபீட் மோடில் படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களின் அடுத்தக் கொண்டாட்டமாக மாறியுள்ளது தளபதி 69 படத்தின் அறிவிப்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 3 நாட்கள் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது. கையில் நெருப்பை ஏந்தியபடியான போஸ்டருடன் தளபதி 69 படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் என்பதும் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள், படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தளபதி 69 பட வில்லன்: இந்நிலையில் படத்தின் வில்லனாக நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிமல் படம் வெளியாகி மிரட்டியது. படத்தில் வில்லன் கேரக்டரில் இவர் அதிரடியாக நடித்திருந்தார். இதையொட்டி இவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டன. இதனிடையே அடுத்ததாக சூர்யாவின் கங்குவா படத்திலும் இவர்தான் வில்லன். இந்நிலையில் தற்போது தளபதியின் இறுதிப்படத்தில் வில்லனாகியுள்ளார் பாபி தியோல். இதையொட்டி இவரது கேரக்டர் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் பாபி தியோல்: இதில் ஸ்டைலான மற்றும் அழுத்தமான லுக்கில் பாபி தியோல் காணப்படுகிறார். இதனிடையே, விஜய் படத்தில் பாபி தியோல் இணைந்துள்ளது குறித்து விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். பீஸ்ட் படத்தில் அனிமல், பவர் மீட்ஸ் பவர் போன்ற பல கமெண்ட்களை இவர்கள் இந்த அறிவிப்பின்கீழ் பதிவு செய்து வருகின்றனர். தளபதி 69 படத்தில் இணையும் அடுத்தடுத்த நடிகர்கள் குறித்து தொடர்ந்து 3 நாட்கள் அறிவிக்கப்பட உள்ளதாக முன்னதாக கேவிஎன் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 5ம் தேதி துவங்கும் சூட்டிங்: மேலும் படத்தில் மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டவர்களும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் சூட்டிங் வரும் 5ம் தேதி துவங்கவுள்ளதாகவும் 4ம் தேதி படத்தின் பூஜை போடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விஜய்யின் இறுதிப்படம் என்ற அறிவிப்புடன் இந்தப் படம் உருவாகவுள்ள நிலையில், படம் கண்டிப்பாக அரசியல் கதைக்களத்தில்தான் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் அறிவிப்பு போஸ்டரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











