24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகை.. அட தளபதி 69ல் இப்படி ஒரு சம்பவம் இருக்கா?

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள கோட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

படம் முதல் 4 நாட்களில் 288 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 நாட்களில் படத்தின் வசூல் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனிடையே கடந்த 7 நாட்களில் 360 கோடி ரூபாய் வரையில் கோட் படம் வசூலிததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

vijay thalapathy 69 h vinoth 69

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி மிகப்பெரிய வரவேற்புடன் வெளியாகியுள்ள நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. முதல் 4 நாட்களில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிய நிலையில் முதல் 4 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 288 கோடி ரூபாய்களை படம் வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே வாரநாட்களில் படத்தின் வசூல் குறைந்துள்ளதையடுத்து கடந்த 7 நாட்களில் 360 கோடி ரூபாய் வரையில் படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தாறுமாறு வசூல்: விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள நிலையில் இந்தப் படத்தை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய படமாக கொடுக்க நினைத்ததாகவும் அதை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களின் கேமியோ காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி போன்றவையும் கவனத்தை பெற்றுள்ளன. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வழக்கம் போல விஜய் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது. இந்த வார இறுதியிலும் படம் சிறப்பான கலெக்ஷனை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

தளபதி 69 சூட்டிங்: விஜய்யின் கோட் படம் ரிலீசாகி வசூலை குவித்துவரும் நிலையில் அடுத்ததாக அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பிற்காகத்தான் ரசிகர்கள் வெயிட்டிங். இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில் விரைவில் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் சூட்டிங் அக்டோபர் 3ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தப் படத்தில் பிரேமலு படத்தின் நாயகி மமிதா பைஜு லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஜோடியாகும் நடிகை: இதனிடையே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சிம்ரன் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் இந்த ஜோடி இணைந்து மாஸ் காட்டிய நிலையில், 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு அனிருத் இசையமைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்திலும் 2 அல்லது 3 கேரக்டர்களில் விஜய் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் தெரிவித்துள்ளார். விஜய்யின் கடைசி படம் என்பதால் பல கெட்டப்புகளில் ரசிகர்கள் அவரை பார்க்க விரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X