Vijay: ஜனவரியில் விஜய்யின் தளபதி 69 படத்தோட சூப்பர் அப்டேட்.. அதுவா இருக்குமோ.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சென்னை: அடுத்தடுத்த அதிரடிகளை சினிமாவிலும் அரசியலிலும் செய்து வருகிறார் விஜய். அவரது கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் சூழலில் அடுத்தக்கட்ட சூட்டிங் பொங்கலை அடுத்து துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட்கேரக்டர்களில் நடித்துவரும் தளபதி 69 படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த மாதத்தில் படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது படத்தின் டைட்டிலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay thalapathy 69 movie tamil cinema 69

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் மாஸ் காட்டிவரும் சூழலில் அரசியலிலும் மாஸ் காட்ட களமிறங்கியுள்ளார் விஜய். அடுத்தடுத்த செயல்பாடுகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். தற்போது நடித்துவரும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கப்பட்டது. தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை பாதிக்காதவண்ணம் இந்தப் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

40% சூட்டிங் ஓவர்: ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் சூழலில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த படங்களால் தன்னுடைய ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகிவரும் விஜய்யின் இறுதிப்படம் என்பதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் 40 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 69 டைட்டில் அறிவிப்பு?: இதனிடையே படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் பொங்கலையடுத்து துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றும் ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. தளபதி 69 என்றே கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் அடுத்த மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துவரும் இந்தப் படம் அரசியல் ஜானரில் உருவாகிவருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு: 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிட உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். அதற்கு சில மாதங்கள் முன்னதாக தளபதி 69 படம் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் அவரது கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் என்ட்ரி முன்னதாகவே கணிக்கப்பட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவித்து கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார் விஜய். தொடர்ந்து கட்சியின் முதல் அரசியல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில் அவரது இறுதிப்படமான தளபதி 69 மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X