எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிப் புன்னகை.. பிரம்மாண்டமாக அரங்கேறிய தளபதி 69 பட பூஜை.. போட்டோஸ் இதோ!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளது. தளபதி 69 படத்தின் அறிவிப்பு கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த 3 நாட்களாக இந்தப் படத்தின் நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியது தயாரிப்பு தரப்பான கேவிஎன் நிறுவனம்.

actor vijay thalapathy 69 movie kvn productions 69

இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இதனிடையே தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ள நிலையில், அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.

actor vijay thalapathy 69 movie kvn productions 69

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகவுள்ளது தளபதி 69. இந்தப் படத்தையடுத்து சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ள நிலையில், தற்போது அந்தப் படத்தின் பூஜையும் இன்றைய தினம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இன்னும் சில மாதங்கள்தான் விஜய்யை நடிகராக பார்க்க முடியும், இன்னும் ஒரு படத்தை மட்டுமே அவரது படமாக பார்க்க முடியும் என்ற நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்தை ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர். விஜய் என்ற எமோஷன் இனி ஒரு படத்தில் மட்டுமே நீடிக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறது.

actor vijay thalapathy 69 movie kvn productions 69

தளபதி 69 படம்: அவரது நடிப்பை கொண்டாட பல படங்கள் இருந்தபோதிலும் புதிய படங்களில் அவரை பார்ப்பது இனி ஒரு முறைதான் நடக்கும் என்ற வகையில் தளபதி 69 படம் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், கடந்த மாதத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும் படத்தில் மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளனர்.

actor vijay thalapathy 69 movie kvn productions 69

தளபதி 69 பட பூஜை: இன்றைய தினம் தளபதி 69 படத்தின் பூஜை போடப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்ட செட்டில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதலில் பாடல் காட்சியின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் இந்த சூட்டிங் தொடர்ந்து ஒரு வார காலம் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல் விஜய்யின் டைட்டில் பாடலாக இருக்குமா அல்லது பூஜா ஹெக்டேவுடன் அவர் இணைந்து ஆட்டம் போடுவாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும். இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் நடந்து முடிந்துள்ள நிலையில், கேவிஎன் நிறுவனம் படத்தின் பூஜை புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

actor vijay thalapathy 69 movie kvn productions 69

தளபதி 69 பட பூஜை புகைப்படங்கள்: இந்தப் பூஜையில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதன் கலர்புல் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் கேப்ஷனில் புகைப்படங்களிலும் சரி, அதை பார்த்துக் கொண்டிருக்கும் உங்க முகத்திலும் சரி மகிழ்ச்சி புன்னகை இருக்கு என்பது எங்களுக்கு தெரியும் என்று கேவிஎன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த பூஜையில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்கவில்லை. ஆனால் விஜய் பட்டு வேட்டி வெள்ளை சட்டையில் பிரகாசமாக காணப்படுகிறார்.

actor vijay thalapathy 69 movie kvn productions 69

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X