கலக்கல் ஜூகல்பந்தி.. விஜய்யின் தளபதி 69 பட பூஜை வீடியோவை வெளியிட்டு அசத்திய தயாரிப்பு தரப்பு!
நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன், பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்ட நிலையில், பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் மிகவும் கலர்ஃபுல்லாகவும் இந்த நிகழ்ச்சி காணப்பட்டது.
விஜய்யின் இறுதிப்படம் என்ற அறிவிப்புடன் தளபதி 69 படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், கடந்த 3 நாட்களாக படத்தின் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இணையதளத்தையே தெறிக்க விட்டுள்ளனர் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர்.

தளபதி 69 பட பூஜை: இந்த நிகழ்ச்சியில் சிறப்பான லுக்குடன் நடிகர் விஜய் காணப்பட்ட நிலையில், அவருக்கு இணையாக அனைத்து தரப்பினரையும் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கவர்ந்திருந்தார். மேலும் நடிகை மமிதா பைஜு, நரேன், பாபி தியோல் உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலர்ஃபுல் புகைப்படங்களை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
தளபதி 69 பூஜை வீடியோ: இந்நிலையில் இந்த சிறப்பான நிகழ்வின் வீடியோவை தற்போது கேவிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பூஜை வீடியோ என்று மகிழ்ச்சியுடன் இந்த வீடியோவை பகிர்ந்த கேவிஎன் நிறுவனம், நாளை முதல் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதையும் இந்த வீடியோவில் உறுதிப்படுத்தியுள்ளது. தளபதி 69 படத்தின் பூஜை நிகழ்ச்சி புகைப்படங்களாகவே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது அதன் வீடியோவும் கலர்ஃபுல் காம்பினேஷனாக ரசிகர்களை கொண்டா வைத்துள்ளது. அடுத்த அப்டேட் வரும்வரை இது போதும் என்று ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

நாளை துவங்கும் சூட்டிங்: தளபதி 69 படம் அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தில் விஜய்யுடன் பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். பீஸ்ட் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆன நிலையில், அது மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இதேபோல இந்தப் படத்தின் பாடல்களும் இசையிலும் நடனத்திலும் அதிரடி காட்டும என்றும் எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் விஜய்யின் சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











