முதல் படத்திலேயே மாஸ் கூட்டணியுடன் களமிறங்கும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ்.. யார் இவர்கள்?
சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டார். தளபதி 69 படத்துடன் தான் படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். விஜய்க்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தளபதி 69 படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் ரசிகர்களை அதிகமாகவே சோதித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பை இன்றைய தினம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 69வது படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தளபதி 69 குறித்த பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில் இன்றைய தினம் இந்த விஷயங்களுக்கு கே வி என் நிறுவனம் முற்றுப்புள்ளியும் அதே நேரத்தில் தளபதி 69 படத்திற்கு துவக்கமும் வைத்துள்ளது. பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கேவிஎன் நிறுவனம் இந்தப் படத்தின்மூலம் தமிழில் மாஸாக களமிறங்கவுள்ளது. படத்தை முன்னதாக கூறப்பட்டபடி ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில் அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இயக்குநர் ஹெச் வினோத்: ஜனநாயகத்தின் விளக்கை ஏற்ற விரைவில் தளபதி வர உள்ளதாக இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த படம் அரசியல் களத்தை மையமாகக் கொண்டு வெளியாக உள்ளது உறுதிப்பட்டுள்ளது. தன்னுடைய படங்களில் சமுதாய கருத்துக்களை மையமாக வைத்து கதைக்களங்களை உருவாக்கி வருபவர் ஹெச் வினோத்,. அஜித் நடிப்பில் இவர் இயக்கிய நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களில் இதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் அதேபோன்றதோடு கான்செப்டில் தளபதி 69 படம் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ்: தளபதி 69 படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு அக்டோபர் ரிலீசாகவுள்ள நிலையில் ஹெச் வினோத் மிகச் சிறப்பான கதைக்களத்தில் இந்த படத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் சமந்தா அல்லது சிம்ரன் விஜய்க்கு ஜோடியாகலாம் என்றும் கூறப்படுகிறது. எதுவாக இருந்த போதிலும் அடுத்தடுத்து படத்தின் அப்டேட்களை ஹெச் வினோத் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
மாஸ் காட்டும் நிறுவனம்: முன்னதாக அதிகமான படங்களை விநியோகித்து மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றுள்ளது கேவிஎன் நிறுவனம். கடந்த 2021ம் ஆண்டில் சகத் என்ற படத்தை தயாரித்தது. தொடர்ந்து பை டூ லவ், படத்தையும் தயாரித்திருந்தது. வெங்கட் நாராயண் மற்றும் நிஷா வெங்கட் ஆகியோர் இந்த நிறுவனத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். தற்போது யாஷ் நடிப்பில் டாக்சிக் படத்தையும் தயாரித்து வருகிறது. அத்துடன் சூர்யாவின் கங்குவா, 777 சார்லி உள்ளிட்ட சில படங்களில் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அடுத்தடுத்த படங்கள்: மேலும் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக கேடி : தி டெவில்ஸ் வார் ஃபீல்ட் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின்அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











