விஜய்யின் கடைசி படத்தின் டைட்டில் இதுவா.. இன்று வெளியாகும் தளபதி 69 பட அறிவிப்பு!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த சில தினங்களிலேயே படத்தின் வசூல் 450 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படம் வெளியான முதல் 4 நாட்களில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 288 கோடி ரூபாய் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து வாரநாட்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான ரசிகர்களை இந்தப்படம் திரையரங்கிற்கு வரவழைத்து வருகிறது. தொடர்ந்து வாரயிறுதி நாட்களான இன்றும் நாளையும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

vijay goat movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்து, அதை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான கோட் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படத்தில் பல சுவாரஸ்யங்களை இணைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தின் குறைகளையும் இந்த சுவாரஸ்யங்கள் மறக்கடிக்க செய்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. படம் முதல் 4 நாட்களில் மிகப்பெரிய வசூலை எட்டியது. 4 நாட்களில் 288 கோடி ரூபாய்களை படம் வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

கோட் படம்: இந்நிலையில் கடந்த 9 நாட்களில் படத்தின் வசூல் 450 கோடிகளை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரயிறுதி நாட்களான இன்றும் நாளையும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான KVN அறிவித்துள்ளது. நேற்றைய தினம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக அனைத்து ரசிகர்களும் எமோஷனலாக மாறினர்.

தளபதி 69 பட டைட்டில்?: இந்நிலையில் விஜய்யின் தளபதி 69 படத்தின் டைட்டில் என்னவா இருக்கும் என்று சமூக வலைதளங்களில் யூகங்கள் வெளியாகிவருகின்றன. விஜய்யின் முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்தப் படத்தில்தான் அவர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பல எல்லைகளை கடந்துள்ளார். பல மாஸ் ஹிட்களை கொடுத்துள்ளார். இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட அவரை தற்போது ரசிகர்கள் தளபதியாகவும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவரது முதல் படத்தின் டைட்டிலே இறுதிப்படத்திற்கும் வைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

தளபதி 69 பட அறிவிப்பு: ஆனால் இன்றைய தினம் வெளியாகவுள்ள தளபதி 69 படத்தின் அறிவிப்பில் டைட்டில் வெளியாகாது என்றே தோன்றுகிறது. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதும் அரசியல் பின்னணியில் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்தப் படத்திற்கு நாளைய தீர்ப்பு என்ற பெயர் பொருத்தமாகவே இருக்கும். இருந்தாலும் அவரது முதல் பட டைட்டிலை இந்தப் படத்திற்கு அறிவிப்பார்களா என்பது சந்தேகமே. எதுவாக இருந்தாலும் இன்று மாலை தளபதி 69 படம் குறித்த ஒரு ஐடியாவை படக்குழுவினர் ரசிகர்களுக்கு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: vijay goat movie விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X